முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் தின விழா

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      சென்னை
Image Unavailable

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் பண்டிகையை ஒட்டி பொங்கல் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் டாக்டர் பழனி, இயக்குனர் தினேஷ், நிர்வாக அலுவலர் ஏழுமலை முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஞானபிரகாசம் வரவேற்றார்.

தொடர்ந்து பொங்கலை ஒட்டி வகுப்பு வாரியாக மாணவர்கள் அவர்களது ஆசிரியர்களின் துணையுடன் சூரிய கடவுளுக்கு பொங்கல் வைத்தும்,பழங்கள், இனிப்புகள் வைத்தும் வணங்கினர். மேலும் விவசாயத்தின் பெருமையை மாணவர்கள் உணரும் வகையில் டிராக்டர், மாடு போன்றவை அலங்கரிக்கப்பட்டு அவைகளுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து தமிழக பாரம்பரிய கலைகளை எடுத்துக்கூறும் வண்ணம் மாணவர்கள் ஒயிலாட்டம், கரகாட்டம் போன்றவைகள் நடத்தி காட்டினர். தொடர்ந்து விழா இறுதியில் பேசிய டி.ஜெ.எஸ் கல்வுி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் பொங்கல் பண்டிகையை தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் சாதி, மதம் பாராமல் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும், ஏனெனில் பொங்கல் தமிழர்களின் பண்டிகை என்று கூறினார்.

தொடர்ந்து மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. முடிவில் தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago