முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளத்தில்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2017      தேனி
Image Unavailable

தேனி - பெரியகுளத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு  நண்பர்கள் இறகுபந்து கழகம் சார்பில் இறகுபந்து போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இப்போட்டியினை ரவி ஸ்டோர் உரிமையாளர் ரவி அவர்கள் துவக்கி வைத்தார். இப்போட்டியில் நியூ கிரவுண்ட் கிளப் அணி, டவுன் யூனியன் கிளப் உள்ளிட்ட 12 அணிகள் பங்குபெற்றன. நான்கு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது. லீக் சுற்று முடிவில் ஆனந்த்-முருகவேல், ராஜ்குமார்-கேசவ், டாக்டர்.கணேஷ்-டாக்டர் சரவணன், கார்த்திக்-முத்தையா ஆகிய ஜோடிகள் வெற்றி பெற்று சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர் லீக் சுற்று ஆட்டத்தில் அதிக புள்ளிகள் அடிப்படையில் நியூ கிரவுண்ட் கிளப்பின் ராஜ்குமார்-கேசவ் ஜோடி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது. நண்பர்கள் இறகுபந்து கழகத்தின் கார்த்திக்-முத்தையா ஜோடி இரண்டாமிடத்தையும்,  டவுன் யூனியன் கிளப்பின் டாக்டர்.கணேஷ்-டாக்டர்.சரவணன் ஜோடி மூன்றாம் இடத்தையும் பிடித்தது. பரிசளிப்பு விழாவில் சாந்திகணேஷ் மருத்துவமனை நிர்வாகி மருத்துவர் கணேஷ், பொறியாளர் நாகராஜ் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.  ரவி ஸ்டோர் ரவி தலைமை தாங்கி வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.  இப்போட்டிகளுக்கான  ஏற்பாடுகளை நண்பர்கள் இறகுபந்து கழகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago