முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாள் விழா ஊட்டியில் இனிப்பு - அன்னதானம் வழங்கி கோலாகல கொண்டாட்டம்

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      நீலகிரி
Image Unavailable

எம்.ஜி.ஆரின் 100_வது பிறந்த நாளையொட்டி ஊட்டியில் இனிப்பு, அன்னதானம் வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அ.இ.அ.தி.மு.கநிறுவனர் அமரர் எம்.ஜி.ஆரின் 100_வது பிறந்த நாள் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழா நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

                                        மாலை அணிவிப்பு

ஊட்டி நகர கழகம் சார்பில் நகர கழக செயலாளர் எஸ்.கே.ஜி.சுரேஷ்குமார் தலைமையில், காபிஹவுஸ் சதுக்கம் பகுதியில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

அதன்பின்னர் மாரியம்மன் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

                              அன்னதானம்

அதனைத்தொடர்ந்து ஏ.டி.சிதிடலில் நகர கழகம் சார்பில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான கழக தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர கழக செயலாளர் எஸ்.கே.ஜி.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தேவாலா ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

                     பொதுக்கூட்டம் 

இந்நிகழ்ச்சிகளில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் அனந்தகிருஷ்ணன், பாசறை மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், நகர்மன்ற முன்னாள் தலைவர் சத்யபாமா, முன்னாள் துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் பால நந்தகுமார், நகர கழக பொருளாளர் மகேஷ்குமார், அவைத்தலைவர் குணசேகரன், துணை செயலாளர் லோகநாதன், பேரவை நகர செயலாளர் கே.சந்திரன்,  அவைத்தலைவர் நாராயணன், டாக்டர் கணேஷ் சந்தீப், டபிள்யூ. மோகன், படகு இல்லம் மோகன், வாட்டர் ஜெயராம், ஓசிஎஸ் தலைவர் சந்திரன், இயக்குநர்கள் சந்திரன், சிவா மற்றும் பிரவீணா, கே.பாபு, தம்பி வில்சன், கார்த்திக், ராயப்பன், நந்தகுமார், சிவச்சந்திரன், காந்தல் சரவணன், முன்னாள் நகர செயலாளர் டி.சுப்பிரமணி, கண்ணன், பாசித் பாய், மகளிரணியைச் சேர்ந்த நாகரத்தினம், ஜோஸ்பினா, நசரத், சித்ரா சுரேஷ், தம்பி வில்சன், நடராஜ், ஆலிவர் போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பிரபாகரன், ஜவரன், ஆரோக்கியநாதன், கணேசன், ஏடிஎம் ரவி, பூக்கடை பெபின், தாமஸ், பசுவராஜ், சண்முகம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago