அடுக்குமாடி குடியிருப்பில் கேமரா எஸ்.பி அறிவுரை

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      ஈரோடு

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், கண்காணிப்பு கேமரா பொருத்த, ஈரோடு எஸ்.பி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து எஸ்.பிசிவக்குமார் விடுத்துள்ள அறிக்கை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், மக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பூட்டிய வீட்டுக்குள் அத்துமீறி யாராவது நுழைந்தால், எச்சரிக்கை செய்யும் வகையில் அலாரம் பொருத்த வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்துவது அவசியம். வீட்டு வேலைக்கு ஆட்களை நியமிப்பதிலும் கவனம் வேண்டும். விலை மதிப்புமிக்க பொருட்களை வீட்டில் வைக்காமல், வங்கி லாக்கரில் வைத்துக் கொள்ள வேண்டும். வங்கிகள், ஏ.டி.எம்களுக்கு முதியவர்கள் பணம் எடுக்க செல்லும்போது கூடுதலாக ஒருவரை அழைத்து செல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: