பள்ளிப்பட்டு ஒன்றிய அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம்

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      சென்னை
thiruthanni

பள்ளிப்பட்டு ஒன்றிய் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ பங்கேற்று பேசினார்.

திருவள்ளுர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியம் அதிமுக சார்பில் கர்லம்பாக்கம் கிராமத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் டி.டி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய துணை செயலாளர் கண்ணைய்யா வரவேற்றார். பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ, பேச்சாளர் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பேசினர். கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் சாந்திபிரியா சுரேஷ், ஒன்றிய அவைத்தலைவர் ஜெயவேலு, பொதட்டூர்பட்டை பேரூர் பொறுப்பாளர் இ.எம்.எஸ்.நடராஜன், ஒன்றிய பொருளாளர் கந்தப்பன், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமநாயுடு, மாணவரணி ஒன்றிய செயலாளர் நரேஷ்,சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் அமாவசை,முன்னாள் கவுன்சிலர்கள் ஏகாம்பரம், முத்துலட்சுமி ஆனந்தன்,துரைசாமி நாயுடு, நொச்சிலி முரளி உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: