முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளுர் ஆர்.எம்.ஜெயின் அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      திருவள்ளூர்
Image Unavailable

திருவள்ளுர்,

 

திருவள்ளுர் ஆர்.எம்.ஜெயின் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் டி.ஏ.ஏழுமலை ஆகியோர் திருவள்ளுர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவள்ளுர், திருவாலங்காடு, கடம்பத்தூர், பேரம்பாக்கம், பூண்டி, கீழச்சேரி, பண்ணூர், பாண்டூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 பள்ளிகளின் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3108 விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்கள்.

 

மாவட்ட கலெக்டர் கூறியதாவது "மறைந்த முன்னாள் முதலைமச்சர் அம்மா அவர்கள் கொண்டுவந்த திட்டங்களில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமும், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டமும் பெண்கல்வியை ஊக்குவிக்கும் திட்டங்களாகும். அனைத்து தரப்பு மாணவ, மாணவிகள் இடைநிற்றல் தடுக்க தமிழக அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மாணவர்கள் பள்ளிகளில் நன்கு படித்து மாவட்டம் மற்றும் மாநிலம் அளவிலான இடங்களை பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தொலை தூரத்தில் இருந்து வரும் மாணவ, மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்க விலையில்லா மிதிவண்டிகள் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ – மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக மாற்ற வேண்டும்" என்று கூறினார்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், திருவள்ளுர் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.ஜெயச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் (திருவள்ளுர்) லில்லிபுஷ்பம்,மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் தயாளன்,டி.ஐ.ராமமூர்த்தி,திருவள்ளுர் வட்டாட்சியர் கார்க்குழலி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago