முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூரில் தீ விபத்தால் சேதமுற்ற வீட்டின் உரிமையாளருக்கு உடனடியாக நிதி மற்றும் நிவாரண பொருட்கள் : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்டம், சனப்பிரட்டி தொழிற்பேட்டையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சேதமுற்ற வீட்டின் உரிiமையாளருக்கு நிவாரண நிதி மற்றும் பொருட்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில் வழங்கி ஆறுதல் கூறினார்.

 

அமைச்சர் ஆறுதல்

 

கரூர் மாவட்டம் சனப்பிரட்டி கிராமத்தைச் சேர்ந்த பாதையூரில் வசிக்கும் பாப்பா கபெ. நாகராஜ் என்பவரின் வீடு மின்கசிவு காரணமாக நேற்றுமுன்தினம் (19.01.2017) காலை திடீரென்று தீப்பிடித்து முற்றிலும் சேதமுற்றதை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு உடனடியாக நிவாரணம் வழங்க ஆலோசனை வழங்கியதையொட்டி கரூர் பெருநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா முன்னிலையில் பாதிக்கப்பட்டவருக்கு தமிழக அரசின் நிவாரணத்தொகையாக ரூ.5,000-ம், 10 கிலோ அரிசி, 1 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் வேட்டி-சேலை ஆகியவற்றை போக்குவரத்துத்துறை அமைச்சர் வழங்கி ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் அசோகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்