முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை திட்டம்: பிப்.28 வரை விண்ணப்பிக்க அவகாசம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      திருநெல்வேலி

நெல்லை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை திட்டத்தின் கீழ், உதவித்தொகை பெற விரும்புவோர் வரும் பிப். 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ், அனைத்து இன பதிவுதாரர்களும் பள்ளியில் படித்து 9ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 45 வயது, மற்ற இனத்தவர்களுக்கு 40 வயது பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது. குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. தகுதியுடைய மனுதாரர்கள் தங்களது அசல் கல்விச் சான்று, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து வரும் பிப்.28ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்துக் கொள்ளலாம். மாற்றுத் திறனாளிகள் தங்கள் கல்வித் தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். அசல் கல்விச் சான்றிதழ்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். மாற்றுத் திறானாளிகளுக்கு வருவாய்த் துறை சான்று தேவையில்லை.ஏற்கெனவே விண்ணப்பம் பெற்றிருந்தால் வங்கி கணக்கு புத்தகம், அசல் கல்விச் சான்றிதழ்கள், வருவாய்த் துறை சான்று ஆகியவற்றுடன் வரும் பிப்.28ஆம் தேதி வரை நேரில் சமர்ப்பிக்கலாம்.

உதவித்தொகை பெறுவதன் மூலம் தங்கள் வேலைவாய்ப்பு பதிவு எண் எந்தவிதத்திலும் பாதிக்காது. ஏற்கெனவே உதவித்தொகை பெற்றிருந்தால் விண்ணப்பிக்க அவசியமில்லை. தொடர்ந்து உதவித்தொகை பெற சுயஉறுதிமொழி ஆவணத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் போதுமானது. சுய உறுதிமொழி ஆவணம் தாக்கல் செய்யாவிட்டால் அவர்களது உதவித்தொகை நிறுத்தப்படும்,இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்