முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட அடப்பன்குளம் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வருகிறது : அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தகவல்

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணியினை மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், தலைமையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

 

வளர்ச்சி பணிகள்

 

இந்த வளர்ச்சிப்பணியினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு செய்து கூறியதாவது:தமிழகஅரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். இதன்படி புதுக்கோட்டை நகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் புதுக்கோட்டை நகராட்சி, அடப்பன்குளத்தில் இடைவெளி நிரப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளம் சீரமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அடப்பன்குளம் 22 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்குளத்திற்கு 4 வரத்துவாரிகள் மூலம் மழைநீர் வரப்பெறுவதுடன் ஒரு வரத்துவாரி வழியாக நீர் வெளியேறும்.

இதன் அனைத்து கரையோரங்களிலும் கற்கள் பதிக்கப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு மழைநீர் குளத்திற்கு பாதுகாப்பாக வந்து வெளியேறும் வகையில் 5 பாலங்கள் அமைக்கப்பட்டும், கரையின் மேற்பகுதியில் பொதுமக்கள் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆய்வின் போது குளத்தின் சீரமைப்புப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும், நடைபெறும் பணிகளை தரமான கட்டுமானப்பொருட்களை கொண்டு விரைவாக கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கூறினார்.

இந்த ஆய்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஆர்.கார்த்திக்தொண்டமான், முன்னாள் நகர்மன்றத்தலைவர் இரா.ராஜசேகரன், நகராட்சி ஆணையர் (பொ) ஜுவாசுப்பிரமணியன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சேட், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கர், ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு நகர்மன்ற உறுப்பினர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago