விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம்: 447 மனுக்கள் வரப்பெற்றன

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      விழுப்புரம்
4

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கலெக்டர் .இல.சுப்பிரமணியன்,  தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.இக்கூட்டத்தில் முதியோர் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் அடையாள அட்டை ஆகியன கோரி 447 மனுக்கள் வரப்பெற்றன.  அவை அனைத்தையும் கலெக்டர்  பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.

இக்கூட்டத்தில் முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அலுவலகத்தில் இருந்து வரப்பெற்ற மனுக்கள், குறைகேட்பு நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள்,  அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களிடம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள், அம்மா அழைப்பு மைய கோரிக்கைகள் ஆகியவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிலுவைக்கான காரணம் ஆகியன குறித்து கலெக்டர்  ஆய்வு செய்தார்.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில்  முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 10 பயனாளிகளுக்கு ரூ.5,15,000-க்கான காசோலையினை மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன்  வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், தனித்துணை கலெக்டர் (ச.பா.தி.) பத்ரிநாத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பொ.கிருபானந்தம், மாவட்ட வழங்கல் அலுவலர் மனோகரன், உதவி ஆணையர் (கலால்) ராஜேந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அனந்தராம், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரவிச்சந்திரன், உதவி இயக்குநர் (தணிக்கை) ஆனந்தன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பிரகாஷ்வேல், வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: