முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிகட்டு போராட்டத்தில் மாநில அரசின் உணர்வுகளை மாணவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்: ராமேசுவரத்தில் விஹச்பி அமைப்பின் நிறுவனர் வேதாந்தம் சிறப்பு பேட்டி.

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்-: ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தமிழக விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிறுவனர் வேதாந்தம் நேற்று வருகை தந்தார்.அதன் பின்னர் சுவாமி,அம்மன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.பின்னர் ராமேசுவரம் கோசுவாமி மடத்தில் நடைபெற்ற தமிழக விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.பின்னர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் உணர்வுகளை மாணவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.அப்போது வி.ஹெச்.பி.யின் மாநில அமைப்பாளர் மனோஜ், மாநில நிர்வாகி ராமசுப்பு, பூஜாரிகள் பேரவையின் மாநில அமைப்பாளர் சோமு ஆகியோர்கள் உடனிருந்தனர். மேலும் செய்தியாளர் சந்திப்பில் தமிழக விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிறுவனர் வேதாந்தம் தெரிவித்தது. தமிழகர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு விதித்துள்ள தடைகளை நீக்க வலியுறுத்தி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் வெற்றியடைந்துள்ள

து.மாணவர்களின் போராட்டத்தை பயன்படுத்தி சில விஷக்கிருமிகளை சேர்ந்த அமைப்புகள் தவறுதலான பாதைக்கு கொண்டு செல்கின்றனர்.தமிழக அரசு மத்திய அரசியிடம் போராடி ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு இருந்து தடையை உடைத்து அவசர சட்டத்தை நிறைவேற்றி தற்காலிகமாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசியிடம் அனுமதி பெற்றுள்ளது..இதுவே மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த பலம்பெறும் வெற்றியாகும்.மாணவர்கள் போர்வையில் சில விஷக்கிருமி அமைப்பை சேர்ந்த போராட்டக்காரர்கள் பிரதமர் மோடியையும்,தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தையும் தவறுதலாக விமர்சனம் செய்து வருவதை வண்மையாக வி.ஹெச்.பி அமைப்பு கண்டிக்கிறது.ஆதலால் மாநில அரசின் உணர்வுகளை மாணவர்கள் புரிந்துகொ

ண்டு போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும். மாணவர்கள் இதுபோன்ற போராட்டங்களை கைவிட்டு கல்யில் கவனம் செலுத்த வேண்டும்.மேலும் அரக்கோணம் பகுதியில் நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கிராமகோயில் பூஜாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை மற்றும் நலவாரியம் சலுகைகளை உயர்த்தி வழங்குவதற்கு தற்போது ஆட்சியிலிருக்கும் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பகுதியிலுள்ள திருக்கோயில்களில் நியமிக்கப்படும் அறங்காவலர் குழுவில் பூஜாரிகளையும் இணைக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அதனை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆதலால் பூஜாரிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்