கன்னியாகுமரி.
கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக லூயி பிரெயிலி கூட்டரங்கில் நடைபெற்றது.
திங்கட்கிழமை தோறும் கலெக்டர் தலைமையில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு குறைகள் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வதுடன், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 6,200- மதிப்பிலான செயற்கை கால் அவயங்கள் என மொத்தம் ரூ. 24,800- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அலுவலக லூயி பிரெயிலி கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.இளங்கோ, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) எம். சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.