பொது சிவில் சட்டத்தை திரும்ப பெற தேசிய லீக் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      திருநெல்வேலி
nellai melapalayam india thesiya leak katchi manadu

நெல்லை

 

பொதுசிவில் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என, மேலப்பாளையத்தில் நடைபெற்ற இந்திய தேசிய லீக் கட்சியின் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

 

நெல்லலை மேலப்பாளையம் பஜார் திடலில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநாடு நடைபெற்றது இந்த மாநாட்டிற்கு கட்சி மாவட்டத் தலைவர் நெல்லை ஹக்கீம் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி கோவை பல்நாசர், மௌலவி அப்துல்ரஹ்மான் மன்பஈ, வழக்குரைஞர் அலிம் அல்புகாரி, மாநில நிர்வாகிகள் தடா காஜாநிஜாமுத்தீன், மக்தூம், சுலைமான் சேட், மாவட்ட நிர்வாகிகள் ஜாமியா செய்யது, அப்துல்வாஹித், அப்துல்காதர், சிக்கந்தர், ஆட்டோ முகைதீன், இபுராஹீம்ஷா, ஜமால், அபுதாஹிர் உள்பட பலர் பேசினர். கூட்டத்தில், "10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும்; சிறைவாசிகளுக்கு வழிக்காவல் இல்லாத பரோல் வழங்க வேண்டும்; சிறுபான்மை மக்களுக்கு எதிரான பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: