முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசின் திறனறி போட்டியில் டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      சென்னை
Image Unavailable

கும்மிடிப்பூண்டி

தமிழக அரசின் விளையாட்டுத் துறை மேம்பாட்டு கழகத்தின் சார்பில் பொன்னேரி கல்வி மாவட்ட அளவில் நடந்த 6-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திறனறிதல் போட்டியில் கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 8 பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.

தமிழக அரசின் விளையாட்டுத் துறை மேம்பாட்டு கழகத்தின் சார்பில் பொன்னேரி கல்வி மாவட்ட அளவில் கும்மிடிப்பூண்டி டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளி திடல் மற்றும் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு ஆணைய திடலில் 6-8 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு திறனறிதல் போட்டிகள் நடைபெற்றது. இதில் சுமார் 60 பள்ளிகளை சேர்ந்த 400 மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளியை  சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவன் சந்திரன், மாணவி எம்.தனுஜாவும் நீளம் தாண்டுதல் போட்டியில் அவரவர் பிரிவில் முதலிடம் பெற்றனர். அதே போல 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் எஸ்.நிர்மல், எம்.வர்ஷா அவரவர் பிரிவில் முதலிடம் பெற்றனர். உயரம் தாண்டுதல் போட்டியில் ஆறாம் வகுப்பு மாணவர் குருசரண், மாணவி எம்.வர்ஷா முதலிடம் பெற்றனர். 100மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 7ஆம் வகுப்பு மாணவன் சரித்திரனும், 6ஆம் வகுப்பு மாணவன் குருசரனும் முதலிடம் பிடித்தனர்.

அதே போல 400மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 8ஆம் வகுப்பு மாணவர் ஸ்ரீஜித் , குண்டு எறிதலில் ஆறாம் வகுப்பு மாணவர் மதன்பாபு இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளி 8 முதலிடம், 2 இரண்டாம் இடத்தை பிடித்து மாவட்ட அளவில் ஒட்டுமொத்த புள்ளி அளவில் இரண்டாம் இடத்தை பிடித்தது.

இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்விற்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி இயக்குனர் பாஸ்கரனையும் பாராட்டி அவர்களுக்கு ஊக்கப் பரிசை வழங்கினார். நிகழ்வில் டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் டாக்டர் பழனி, முதல்வர்  ஞானபிரகாசம், தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்