முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு முன்னாள் படைவீரர்கள் நலனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது : கலெக்டர் கணேஷ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் தொழில்முனைவோர் கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட முப்படைவீரர் வாரியத் தலைவர்; சு.கணேஷ், தலைமையில் நேற்று (24.01.2017) நடைபெற்றது.

 

வாரிய தலைவர்

 

இந்த தொழில்முனைவோர் கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட முப்படைவீரர் வாரியத் தலைவர் துவக்கி வைத்து பேசியதாவது.

தமிழக அரசு முன்னாள் படைவீரர் நலத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதன்படி முன்னாள் படைவீரர்களுக்கு சுயவேலை வாய்ப்பு துவங்கிட ஊக்குவிக்கும் வகையில் தொழில்முனைவோர் கருத்தரங்கு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நமது மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்களுக்கு தொழில்முனைவோர் கருத்தரங்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கில் காரைக்குடி மற்றும் தஞ்சாவூர் திறன் மேம்பாட்டு மையங்கள், மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், நபார்டு, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், காதி மற்றும் கிராம தொழில் வாரியம், வேலைவாய்ப்புத் துறை மற்றும் தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் தங்களது துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சுயதொழில் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். மேலும் தமிழக அரசு முன்னாள் படை வீரர்கள் நலனை மேம்படுத்தும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னுரிமை அளித்து வருவதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. எனவே முன்னாள் படைவீரர்கள் இந்த தொழில்முனைவோர் கருத்தரங்கை முறையாக கற்று சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட முப்படைவீரர் வாரியத் தலைவர்; சு.கணேஷ், பேசினார்.

இந்நிகழ்ச்சியில் விங்.கமாண்டர்.வே.கணேசன் உதவி இயக்குநர் (பொ) முன்னாள் படைவீரர் நலம், அரசு அலுவலர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago