எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.170 கோடியே 64 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுடன் கூடிய 3,240 பார்கள் இருக்கின்றன. இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஒரு நாளைக்கு ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது. வார இறுதி நாட்களில் அது ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடியாக அதிகரிக்கிறது. பண்டிகை காலங்களில் மது விற்பனை மேலும் 15 சதவீதம் உயருகிறது.
கடந்த ஆண்டு தீபாவளி மது விற்பனை ரூ.438 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு ரூ.600 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலக்கையும் தாண்டி ரூ.789 கோடியே 85 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதாவது, கடந்த 18-ந் தேதி ரூ.230 கோடியே 6 லட்சத்திற்கும், 19-ந் தேதி ரூ.293 கோடியே 73 லட்சத்திற்கும், நேற்று முன்தினம் (தீபாவளி) ரூ.266 கோடியே 6 லட்சத்திற்கும் என மொத்தம் ரூ.789 கோடியே 85 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது.
மண்டலம் வாரியாக பார்க்கும்போது, அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.158 கோடியே 25 லட்சத்திற்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.157 கோடியே 31 லட்சத்திற்கும், சேலம் மண்டலத்தில் ரூ.153 கோடியே 34 லட்சத்திற்கும், மதுரை மண்டலத்தில் ரூ.170 கோடியே 64 லட்சத்திற்கும், கோவை மண்டலத்தில் ரூ.150 கோடியே 31 லட்சத்திற்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


