எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக நேற்று முன்தினம் 71 அடி உயரமுள்ள வைகைஅணை 69 அடி வரை எட்டியதால் அணையில் இருந்து விநாடிக்கு 3,600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் நேற்று முன்தினம் காலை மதுரை வந்தடைந்தது. இதனையொட்டி வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வைகை ஆறு பாய்ந்தோடும் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு உள்ளது.
இதனால் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ள நிலையில் வைகை ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மதுரை சிம்மக்கல் தரைப்பாலம்-விரகனூர் செல்லும் இணைப்பு சாலையில் இருகரைகளை உரசியவாறு தண்ணீர் செல்கிறது. இதனையடுத்து மதுரை வைகையாற்று பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் கால்நடைகளை பாதுகாப்பாக பராமரிக்கவும், கால்நடைகளை ஆற்றில் இறக்கிவிட வேண்டாம் எனவும், நீர்நிலைகளின் அருகில் கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி விடுமுறை என்பதால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வைகை ஆற்றில் இறங்கி குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


