Idhayam Matrimony

காவலர் வீரவணக்க நாள்: முதல் முறையாக காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2025      தமிழகம்
CM-1 2025-10-19

சென்னை, காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், 175 காவலர் குடும்பத்தின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார். தமிழக முதல்வர் கலந்து கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் நாள் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீனப்படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் கொல்லப்பட்டதை நினைவுகூறும் விதமாகவும், காவல்துறையில் பணியில் இருந்த போது உயிர் தியாகம் செய்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னை காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், வீரமரணம் அடைந்த காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். காவலர் வீரவணக்க நாள் விழாவில், தமிழக முதல்வர் கலந்து கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அதனையொட்டி, 175 காவலர் குடும்பத்தின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள், வழங்குவதின் அடையாளமாக 20 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். மேலும், பணியின் போது உயிரிழந்த பல்வேறு காவலர்களின் குடும்பத்தினர்களுக்கு மொத்தம் ரூ.5.70 கோடி காப்பீட்டுத் தொகை மற்றும் கருணைத் தொகையையும் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து