பொன்னேரியில் கல்லூரி மாணவ,மாணவியர் கலந்துக்கொண்ட தேசிய வாக்காளர் தின பேரணி சப்-கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      சென்னை
DSCN6197

திருவள்ளுர் மாவட்டம்,பொன்னேரியில் சாராட்சியர் அலுவலகத்தில் 7 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ,மாணவியர்கள் கலந்துக்கொண்ட அமைதி பேரணியும்,விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.

 

பொன்னேரியில் சாராட்சியர் அலுவலகத்தில் துவங்கிய பேரணியை பொன்னேரி சப்-கலெக்டர் தண்டபாணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.பொன்னேரி அம்பேத்கர் சிலை வழியாக புதிய பேருந்து நிலையம்,தேரடி,அண்ணாசிலை வரை சென்று அங்கு மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.பின் மீண்டும் சாராட்சியர் அலுவலகம் வந்து பேரணி நிறைவடைந்தது.

 

பேரணியில் உ.நா.அரசு கல்லூரி மற்றும் ஸ்ரீதேவி கலைக்கல்லூரி மாணவ,மாணவியர்கள் கலந்துக் கொண்டு தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பலகைகளை கையிலேந்தி சென்றனர்.

 

இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி வட்டாட்சியர் செந்தில்நாதன்,சிறப்பு தனி வட்டாட்சியர் தமிழ்செல்வன்,துணை வட்டாட்சியர் ரஜினிகாந்த்,பொன்னேரி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: