திருவண்ணாமலையில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினவிழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கிவைத்தார்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      திருவண்ணாமலை
photo01

திருவண்ணாமலையில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தொடங்கிவைத்தார். இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின்சார்பில் தி.மலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் தொடங்கிய தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணிக்கு தலைமையேற்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கொடியசைத்து நேற்று தொடங்கிவைத்தார். இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக அண்ணாமலையார் கோவில் 16 கால் மண்டபம் முன்பு சென்றடைந்தது. தோலில் ஏற்படும் உணர்ச்சியற்ற படை (அ) தேமல் தொழுநோயின் ஆரம்ப அறிகுறி, கூட்டு மருந்து சிகிச்சை தொழுநோயை குறுகிய காலத்தில் முற்றிலும் குணப்படுத்தும், ஆரம்ப நிலையில் தொழுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஊனம் வராமல் தடுக்கலாம். தொழுநோயா என சந்தேகமா உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும் மற்றவர்களையும் ஊக்கப்படுத்துங்கள், அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நகர நல மையங்களிலும் தொழுநோய்க்கு சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது. போன்ற பதாகைகளுடன் மாணவ மாணவிகள் பேரணியில் விழிப்புணர்வு ஏற்படுததிச் சென்றதோடு துண்டு பிரசுரங்களையும் வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் வழங்கிச் சென்றனர். இந்த பேரணியில் மருத்துவ பணிகள் (தொழுநோய்) துணை இயக்குநர் டாக்டர் என்.ராஜேந்திரன், கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, தாசில்தார் சி.பன்னீர்செல்வம், மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தசாமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.முத்தமிழ்ச்செல்வன், சண்முகா அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் டி.எஸ்.பாலாஜி, சாரண ஆசிரியர் அ.மணி, வேளாண் ஆசிரியர்கள் எம்.மோகன், ஆசிரியர்கள் ஏ.அருள்தாஸ், வி.அன்புவேலன், உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தன் உள்பட அரசு அலுவலர்கள், மருத்துவ துறை அலுவலர்கள், என்எஸ்எஸ், தேசிய பசுமைப்படை மாணவ மாணவிகள், பள்ளி மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: