முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழவேற்காட்டில் நீதியரசர்.சேதுமுருகபூபதி முன்னிலையில் மனித உரிமை பிரகடன விழா

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      சென்னை

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த வைரவன்குப்பம் கிராமம் அரசு துவக்க பள்ளியில் தேசிய மக்கள் நேயம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாநில மற்றும் திருவள்ளூர் மாவட்ட மனித உரிமை பிரகடன விழா நடைப்பெற்றது.திருவள்ளுர் மாவட்டத்தலைவர் வைரவன்குப்பம் எ.கனகராஜ் தலைமையில் தேசிய பொதுச்செயலாளர் டாக்டர்.பி.சுந்தரேசன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மண்டல தலைவர் தட்சிணாமூர்த்தி தொடக்கவுரையாற்றினார்.சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பேசிய தலைமை குற்றவியல் நீதிபதி,புதுவை தமிழ்சங்க சிறப்புத்தலைவர் நீதியரசர்.மாண்பமை சேதுமுருகபூபதி ‘இந்த உலகில் மனித நேயம் தலைத்து ஓங்கவும்,மனித உரிமை போற்றி பாதுகாப்படவும்’ விளக்கம் அளித்தார். மேலும் 63 நாயன்மார்களில் ஒருவரான மீனவ சமூகத்தைச் சேர்ந்த ஆதிபத்து நாயனார் பற்றி விளக்கி கூறினார்.இந்த நிகழ்ச்சியில் இயக்க நிர்வாகிகள் ருசேந்திரபாபு,ஜீவரத்தினம்,கோதண்டராமன்,குணசேகரன்,சந்துரு,கர்நாடக மாநில நிர்வாகிகள் முரளி,பழனி,வைரவன்குப்பம் ஞானமூர்த்தி மற்றும் திருவள்ளுர் மாவட்ட நிர்வாகிகள்,பழவேற்காடு பகுதி நிர்வாகிகள்,காஞ்சிபுரம் மற்றும் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்துக்கொண்டனர்.மனித நேயர் சிவகுமார் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago