முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் 69 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அ.தி.மு.க. இலக்கிய அணி தீர்மானம்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      அரசியல்
Image Unavailable

சென்னை, மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளை சிறப்பாக நடத்துவது என்றும் ,அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பாதுகாக்கும் பாசறையாக இருந்து பணியாற்றுவது எனறும் அதிமுக  இலக்கிய அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அ.தி.மு.க இலக்கிய அணி ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கழக இலக்கிய அணி செயலாளர்  பா. வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள், இலக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கழகப் பொதுச் செயலாளர் சசிகலா எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பாதுகாக்கும் பாசறையாக பணியாற்ற இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை, கழகப் பொதுச் செயலாளர் சசிகலாவின் சீரிய வழிகாட்டுதலோடு, மாநிலம் முழுவதும் பட்டிமன்றம், பல்கலை நிகழ்ச்சிகள், திருக்கோயில்களில் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

7 தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுச் சின்னத்தை, புனித வழிபாட்டுத்தலமாக மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக கலாச்சாரத்தின் அசைக்க முடியாத அடையாளமாக இருந்த தடைகளை தகர்த்தெறிய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அவசர சட்டம் கொண்டுவர பக்கபலமாக இருந்த கழகப் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், சசிகலாவின் வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் தங்குதடையின்றி நடைபெற ஏற்பாடுகளைச் செய்த மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசுக்கும், ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க ஒத்துழைத்த மாணவர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உட்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago