Idhayam Matrimony

இந்தியா வரி செலுத்தும்; அமெரிக்கா செலுத்தாது: தீர்ப்பிற்கு பிறகு ட்ரம்ப் விளக்கம்

சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2026      உலகம்
Trump 2024-12-21

நியூயார்க், அமெரிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் எதுவும் மாறவில்லை, இந்தியா வரி செலுத்தும், அமெரிக்கா வரி செலுத்தாது, பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தியா உள்பட உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி உள்பட அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபா் ட்ரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்கள் கூட்டத்தில் செய்தியாளர் ஒருவர் இந்தியாவுக்கு எதிரான வரி விதிப்பு குறித்து கேள்வி எழுப்பிய போது இந்த விளக்கத்தை கூறினார்.

அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஏஎன்ஐ செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "எதுவும் மாறவில்லை. இந்தியா வரிகளை செலுத்தும், அமெரிக்கா வரிகளை செலுத்த வேண்டியதில்லை... பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர். அமெரிக்காவைப் பொறுத்தவரை அவர் எதிர்த்தவர்களை விட அவர் மிகவும் புத்திசாலி... எனவே நாங்கள் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தோம்... அந்த ஒப்பந்தத்தின் மூலம் நாங்கள் இந்தியாவுக்கு வரிகளை செலுத்தமாட்டோம். அவர்கள் செலுத்துவார்கள். ஏற்கனவே இருந்த நிலையை நாங்கள் கொஞ்சம் தலைகீழாக மாற்றினோம்" என்று கூறுகிறார்.

மேலும், இந்தியா - அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில், அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் எந்த மாற்றமும் ஏற்படாதா? ஒப்பந்தம் அப்படியே நீடிக்குமா? என்று செய்தியாளர் தொடர்ந்து கேள்வி எழுப்பியதற்கு, ஆமாம், எந்த மாற்றமும் இல்லை. அந்த வர்த்தக ஒப்பந்தம் அப்படியே நடைமுறைப்படுத்தப்படும் என்று ட்ரம்ப் பதிலளித்தார். இது சிறந்த வர்த்தக ஒப்பந்தம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பினால், டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்குப் பிறப்பித்த வரி விதிப்புகள் தளர்வு பெறும் என இந்திய தொழில் அமைப்பினர் நினைத்திருந்த நிலையில், அமெரிக்கா - இந்தியா இடையே கையெழுத்தா வர்த்தக ஒப்பந்தம் எந்த மாற்றமும் இன்றி நடைமுறைப்படுத்தப்படும் என ட்ரம்ப் அறிவித்ததோடு, பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த மனிதர் என புகழாரமும் சூட்டியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து