முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு: பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் குழுவை அமைத்தது தி.மு.க.!

சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2026      தமிழகம்      அரசியல்
Duraimurugan 2022 12 11

சென்னை, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட 7 பேர் கொண்ட குழு அமைத்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கம், தமிழகம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் முறையே மே 7, 10, 20, 23, ஜூன் 15 ஆகிய தேதிகளில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, இந்த மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தலை நடத்துவதற்கான பணிகளை தோ்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 23-ம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 

சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தலைமையிலான இந்திய தோ்தல் ஆணையக் குழு பிப்.25 முதல் 27-ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்ள உள்ளது. இதனிடையே, ஏப்ரலில் தோ்தலுக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட 7 பேர் கொண்ட குழு அமைத்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழுவில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணைப்பொதுச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து