கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      தூத்துக்குடி

கோவில்பட்டி

 

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னையில் அமைந்துள்ள பிரபல நிறுவனமான ஜிலாபா சாப்ட்வேர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தாரால்; டிப்ளமா மற்றும் பி.எஸ்சி. பிரிவில் கணிப்பொறியியல் மற்றும் இன்பர்மேசன் டெக்னாலஜி துறையில் மூன்றாமாண்டு படித்து வருகின்ற மாணவ, மாணவிகளுக்கு வளாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, கோவில்பட்டி, கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவில்பட்டி, அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி, சிவகாசி, பாரதியார் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, எட்டையாபுரம் உட்பட 16க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து 123க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கான நேர்முகத்தேர்வு ஜிலாபா சாப்ட்வேர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. பாலாஜி, துணைத் தலைவர் திரு. வெங்கடேஷ், மனித வளத்துறை மேலாளர் திரு. தஸ் தாகீர் மற்றும் முதுநிலை புரோகிராமர் திருமதி ஜெயலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினரால் நடத்தப்பட்டது. முதல் சுற்றில் நடைபெற்ற எழுத்து தேர்வின் மூலம் 30 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர் நடைபெற்ற நேர்முகத் தேர்வில்;; லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட மொத்தம் 7 பேர் தேர்வு செய்யப்பட்டு, இவர்களுக்கான பணி நியமன ஆணை ஜிலாபா சாப்ட்வேர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தாரால் வழங்கப்பட்டது.;.ஏற்பாடுகளை கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் திரு. கே.ஆர்.அருணாசலம் அவர்கள் ஆலோசனையின் பேரில் பயிலக முதல்வர், திரு. எம். குப்புசாமி, பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அதிகாரி திரு. ஆர். ராஜாமணி மற்றும்; ஆசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: