முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனியில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      தேனி
Image Unavailable

தேனி - தேனியில் சசிகலாவை கண்டித்து அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் நினைவிடத்தில் தற்போதைய தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்; அவர்கள் தியானம் மேற்கொண்டு கட்சியின் நிலைப்பாடு பற்றி தெரிவித்தார்.  அதனை தொடர்ந்து ஒ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் தேனியில் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவை கண்டித்து அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். உண்ணாவிரதத்தின்போது, சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியேற வேண்டும்,  அவருக்கு முதல்வராக தகுதியில்லை, மேலும் பொதுசெயலாளர் பதவி ஒரு கேடா? என்பன உள்ளிட்ட பல கோஷங்களை எழுப்பினர். உண்ணாவிரதத்தில் தேனி நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சுந்தரம், 4வது வார்டு பாசறை இணை செயலாளர் கிருஷ்ணபிரபா, நகர அம்மா பேரவை தலைவர் அய்யப்பன்,  தொழிற்சங்க செயலாளர் பொன்னீஸ்வரன், முன்னாள் கவுன்சிலர்கள் அமுதவள்ளி, லெட்சுமி, மற்றும் மணவாளன், பாலசந்தர், கார்த்திக், ரெங்கநாதன், சுரேஷ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்