ஆதார் சேர்க்கை பணிக்கு பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்தால் சிறை தண்டனை: கலெக்டர் தகவல்

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2017      விழுப்புரம்

விழுப்புரம்,

 

விழுப்புரம் மாவட்டத்தில் ஆதார் சேர்க்கை பணி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் வாயிலாக நிரந்தர சேர்க்கை மையங்களில் (Pநுஊ) நடைபெற்று வருகிறது. நிரந்தர சேர்க்கை மையங்களில் நடைபெறும் புதிய ஆதார் பதிவிற்கு கட்டணம் ஏதும் கிடையாது. இது ஒரு கட்டணம் இல்லா சேவை ஆகும். ஆனால் தனி நபர்கள் சிலர் விரைவாக ஆதார் எண் பெற்றுத் தருவதாகக் கூறி பொது மக்களிடம் பணம் வசூலிப்பதாகத் தெரிய வந்துள்ளது. பொதுமக்களை ஏமாற்றும் இத்தகைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழிமுறைகள் வகுத்துள்ளது.

 

இந்த வழிமுறைகளின்படி, பொது மக்களிடம் கட்டணம் வசூலிக்கும் நபர்களிடமிருந்து ரூ.10,000- வரை அபராதமாக வசூலிக்கவும், ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் ஆதார் எண்ணை பெற தமிழக அரசு நிறுவனங்களால் மாநகராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் நிர்வகிக்கப்படும் நிரந்தர சேர்க்கை மையங்களை மட்டுமே நேரில் அணுகி பயன்பெறுமாறு கலெக்டர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: