கடலூர் மாவட்ட பொது மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      கடலூர்
Feb 13-j

கடலூர்.

கடலூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்ப்பு அரங்கத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம்  கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   தலைமையில்  நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டர் அவர்களிடம் நேரில் அளித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கென மனுக்கள் பெறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு கலெக்டர்  நேரில் சென்று மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்றார்.மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மொத்தம் 310 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என கலெக்டர்  அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.மேலும், கலெக்டர்  மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் பரங்கிப்பேட்டை வட்டாரத்தை சேர்ந்த 13 பயனாளிகளுக்கு ரூ.59,280- (தலா ரூ.4,560-) மதிப்பிலான இலவச சலவை பெட்டிகளை வழங்கினார். இன்றைய குறைதீர்ப்பு கூட்டத்தில் காதொலி கருவி வேண்டி விண்ணப்பித்த கடலூர் தம்பிப்பேட்டையை சேர்ந்த லலிதா மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பித்த உடனேயே மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் ரூ.4200- (தலா ரூ.1200-) மதிப்பிலான காதொலி கருவிகளை கலெக்டர்  வழங்கினார்.      இக்குறைகேட்புக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோவிந்தன், உதவி ஆணையர் (கலால்) ஆர்.முத்துகுமாரசாமி உட்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: