ஆலங்குளத்தில் வறட்சி பாதிப்பு: கலெக்டர் கருணாகரன் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      திருநெல்வேலி

நெல்லை

ஆலங்குளம் பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர்  மு.கருணாகரன்  ஆய்வு செய்தார். நெல்லை மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தற்போது நெல், கரும்பு மற்றும் உளுந்து ஆகிய பயிர்கள் வளர்ந்து வருகின்றன.  தற்போது மழை இல்லாமல் வட்டார பகுதி வறண்டு விட்டதால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மேற்கண்ட பயிர்கள் வாடி வதங்கி விட்டன.  இதனால் ஏராளமான விவசாயிகள் கலக்கமடைந்ததுடன் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட மாறாந்தை கிராமத்தில் உள்ள இசக்கிதுரை என்பவரது அறுவடை செய்யப்பட்ட திடலை மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன், பின் ஆய்வு செய்து அதில் விளைச்சல் ஏதுமில்லை என்பதை உறுதி செய்தார்.மேலும் ஆலங்குளம் வட்டாரத்தில் நெல் பயிர்கள் வறட்சிக்கு உள்ளான பகுதிகளையும் பார்வையிட்டார்.வட்டாட்சியர் பார்கவிதங்கம், வேளாண்மை இணை இயக்குநர் கனகராஜ், வேளாண்மை உதவி இயக்குநர் சுந்தரம் உள்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: