சிறு தொழில் நிறுவனங்கள் உத்யோக் ஆதார் பதிவு செய்ய வேண்டும் கலெக்டர் எம்.ரவி குமார் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்யோக் ஆதார் பதிவு செய்வது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர்  எம்.ரவி குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பதிவு செய்யும் விதத்தில் EM பகுதி I மற்றும் EM பகுதி II ஒப்புகை வழங்கும் நடைமுறை இணையதளம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வந்தது. 20.01.2016 முதல் மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை நிலை ஆணை எண்.2576, நாள்: 18.09.2015-ன் படி EM பகுதி ஐ மற்றும் EM பகுதி II ஒப்புகைகள் சிறுதொழில் பதிவு சான்றுக்கு மாற்றாக உத்யோக் ஆதார் பதிவறிக்கை” (Udyog Aadhaar Memorandum) என்ற பெயரில் இணையதளம் வழியாக ஒப்புகை வழங்கப்படுவது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது..எனவே 18.09.2015 முதல் 21.01.2016 வரையிலான காலங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் EM பகுதி II ஒப்புகை பெற்ற 868 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், http://udyogaadhaar.gov.in என்ற இணையதளத்திலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் EM பகுதி II பதிவிற்கு இணையான “உத்யோக் ஆதார் பதிவினை” மேற்கொண்டு அதற்கான பதிவறிக்கையினை உடனடியாக பதிவிறக்கம் செய்வது அவசியம் என தெரிவிக்கப்படுகிறது.உத்யோக் ஆதார் பதிவினை பதிவிறக்கம் செய்த பின் அதன் நகலை மாவட்ட தொழில் மையம், தூத்துக்குடி” அலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில் மேற்கூறிய தங்கள் நிறுவனங்களின் பதிவானது சிறு தொழில் பதிவு தகவல் களத்திலிருந்து நீக்கப்படும். எனவே இந்நிறுவனங்கள் மத்திய, மாநில அரசு வழங்கும் சலுகைகள் / மானியங்கள் கேட்டு விண்ணப்பிக்க இயலாத நிலை எழும் எனவும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்  எம்.ரவி குமார்  தெரிவிக்கிறார்

இதை ஷேர் செய்திடுங்கள்: