முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி மாவட்டத்தில் 23ம் தேதி அரசு புறம்போக்கு குளங்களில் மண் எடுக்க அனுமதி சிறப்பு முகாம் கலெக்டர் எம்.ரவி குமார் தகவல்

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      தூத்துக்குடி

 

தூத்துக்குடி

 

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு குளங்களிலிருந்து மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை இலவசமாக எடுக்க அனுமதி வழங்க 23.02.2017 அன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக கலெக்டர் எம்.ரவி குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பொது மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு அவர்களின் சொந்த நோக்கத்திற்காகவும் விவசாய நிலங்களை மேம்படுத்தும் நோக்கத்திற்காகவும் அரசாணை எண் 233 (எம்.எம்.சி.2) தொழில்துறை நாள் 23.09.2015 இன் படி 1959 ஆம் வருடத்திய தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளில் விதி எண் 12 (2) இல் விகுத்துள்ள புதிய வழிமுறைகளின்படி,தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய் குளம் ஆகியவற்றில் மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை எடுக்க தகுதி வாய்ந்த குளம் கண்மாய்களின் பட்டியல்கள் அனைத்து வட்டாட்சியர்கள், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையிடமிருந்து பெறப்பட்டு 318 குளங்கள் கண்மாய்கள், மண் வண்டல் மண் சவுடு கிராவல்/ ஏனையவை எடுக்க தகுதி வாய்ந்தவை என அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. குளங்களின் பட்டியல் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.மேற்படி குளங்கள் கண்மாயிலிருந்து பொது மக்கள் விவசாயிகள், தங்களின் சொந்த உபயோகத்திற்காக விவசாய தேவைகளுக்காக 30 கன மீட்டர் (அதாவது 200 கன அடி கொள்ளளவு 5 லாரிகள்) அளவிற்கு எந்தவித் கட்டணமும் செலுத்தாமல் மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை எடுத்துக் கொள்ளலாம். இதற்கான அனுமதி வழங்கும் சிறப்பு முகாம் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் 23.02.2017 காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.குளம் அமைந்துள்ள கிராமம் மற்றும் குளம் அமைந்துள்ள கிராமத்திற்கு அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பட்டா மற்றும் கிராம கணக்குகள் பெற வேண்டும். மேலும் பொதுப்பணித்துறை குளத்திலிருந்து மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை எடுக்க வேண்டும் எனில் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் இளநிலைப் பொறியாளரிடமும், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள குளத்தில் இருந்து மண் எடுக்க வேண்டும் எனில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, ஒன்றியப் பொறியாளர் உதவிப் பொறியாளரிடமும் அனுமதி பெற்றுக் கொள்ளலாம். கிராம நிர்வாக அலுவலர்களும் சம்பந்தப்பட்ட பொறியாளர்களும் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் 23.02.2017 அன்று முகாமின் போது கலந்து கொள்வார்கள். தாலுகா அலுவலகத்திலேயே பொதுமக்கள் விவசாயிகளுக்கு உடனுக்குடன் அனுமதி ஆணைகள் வழங்கப்படும். இந்த அனுமதி ஆணை 03.03.2017 வரை மட்டும் செல்லுபடியாகும்.பொதுமக்கள் விவசாயிகளுக்கு, மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும். பொதுமக்கள் விவசாயிகளுக்கு, மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை இலவசமாக அதிகபட்சமாக 30 கன மீட்டர் (அதாவது 200 கன அடி 5 லாரி லோடு) வழங்கப்படும். குளம் கண்மாய் நீர்பிடிப்பு பகுதியில் தண்ணீர் முற்றிலும் இல்லாத இடங்களில் மட்டும் துறையால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை எடுக்க வேண்டும்.குளம் கண்மாயின் இயற்கைத் தன்மை பாதிக்கப்படாமல் ஒரு மீட்டர் ஆழத்திற்கு மட்டும் மண்/வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை எடுக்க வேண்டும்.குளம் கண்மாயில் மணல் இருப்பின் மணல் எடுக்க அனுமதி இல்லை. குளம் கண்மாயில் பொதுப்பணித்துறை ஊரக வளர்ச்சித் துறையால் குறிப்பிடப்பட்ட பகுதி தவிர வேறு இடத்தில் மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை எடுக்க அனுமதி இல்லை. எனவே, பொதுமக்கள் விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி 23.02.2017 அன்று தாலுகா அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவைப்படும் மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை இலவசமாக பெற்றுக் கொள்ள மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்