திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் மு.கருணாகரன், தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      திருநெல்வேலி
2

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்  மு.கருணாகரன், தலைமையில்  நடைபெற்றது. பொதுமக்கள் ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டர் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இராதாபுரம் வட்டம், தணக்கர்குளம் கிராமத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி சுப்பிரமணியன் என்பவருக்கு மாற்றுத்திறனாளி உதவித் தொகைக்கான ஆணையினையும், திருநெல்வேலி வட்டத்தைச் சார்ந்த இரண்டு பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளையும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ், இரண்டு நபர்களுக்கு சத்துணவு சமையல் உதவியாளராக பணிபுரிவதற்கான ஆணைகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையின் மூலம், சேரன்மகாதேவி வட்டம், உலகன்குளம் கிராமத்தைச் சார்ந்த 4 நபர்களுக்கு தலா 2 சென்ட் வீதம் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் கலெக்டர்  மு.கருணாகரன், வழங்கினார்கள்.மேலும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையின் சார்பில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த 8 ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களையும் கலெக்டர்  மு.கருணாகரன், வழங்கினார்கள்.முன்னதாக, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, முதிர்கன்னி உதவித் தொகை, பட்டா மாறுதல், குடிநீர், சாலை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் அவர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் பெற்று, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, விரைவில் பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்கள்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.க.குழந்தைவேல், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ஆர்.விஜயலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பேச்சியம்மாள், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் எஸ். நிர்மலா, மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி, சமூகபாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் (இராதாபுரம்) புகாரி, (திருநெல்வேலி) மோகனா உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: