குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      கன்னியாகுமரி
kan c

கன்னியாகுமரி,

 

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்;கில் நடைபெற்றது.கன்னியாகுமரி மாவட்டத்தில் 17.02.2017 அன்று பேச்சிப்பாறை அணையின் நீர்மட்ட இருப்பு 3.80 அடியும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்ட இருப்பு 8.00 அடியும், சிற்றார்-1 அணையின் நீர்;மட்ட இருப்பு 1.25 அடியும், சிற்றார்-2 அணையின் நீர்;மட்ட இருப்பு 1.34 அடியும், பொய்கை அணையின் நீர்மட்ட இருப்பு 4.10 அடியும், மாம்பழத்துறையாறு நீர் மட்ட இருப்பு 25.51 அடியும் உள்ளது. 20.02.2017 அன்று வரை வேளாண் விரிவாக்க மையம் மூலம் 245.545 (மெ.டன்) பரப்பில் நெல் பயிறு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 01.04.2016 முதல் 20.02.2017 முடிய 20,079 நெட்டை ரக தென்னங்கன்றுகளும், 19,035 நெட்டை குட்டை ரக தென்னங்கன்றுகளும், 1,139 குட்டை நெட்டை ரக தென்னங்கன்றுகளும் ஆக மொத்தம் 40,253 தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தடையின்றி உரம் விநியோகிப்பதற்காக டான்பெட் நிறுவனத்தில் 462 மெட்ரிக் டன்னும், கூட்டுறவு சங்கங்களில் 2,305 மெட்ரிக் டன்னும், தனியார் விற்பனையாளர்களிடம் 425 மெட்ரிக் டன்னும் ஆக மொத்தம் 3,192 மெட்ரிக் டன் உரம் இருப்பில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. எனவும், அமராவதி குளத்துக்கு தண்ணீர் வரும் நீர்வரத்து கால்வாயில் செடிகொடிகள் அகற்றி, கால்வாய் தூர்வாரிட ரூ.1.00 இலட்சம் மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், இராமசமுத்திரம் எஸ்கேப் ஷட்டர் பழுது சரி செய்ய ரூ.50,000ஃ- மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் பழுது சரிசெய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், தேவர் குளத்தின் மறுகால் பகுதியில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சரி செய்யும் பணிக்கு ரூ.3.00 இலட்சத்திற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒப்பளிப்பு பெறப்பட்ட பின், பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடர்ந்து, குவிந்த நட்டத்தில் செயல்பட்டு வருவதால் உறுப்பினர்களுக்கு பங்கு ஈவு தொகை வழங்க இயலாத நிலை உள்ளது. சங்கம் நிகர இலாபம் ஈட்டும் பட்சத்தில் பங்குதாரர்களுக்கு பங்கு ஈவு தொகை வழங்கப்படும் எனவும், வன்னிய+ர் முதல் மாலைக்கோடு வரை தூர்வார வரும் நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ள முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் , விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் இணை இயக்குநர் (பொறுப்பு) சந்திரசேனநாயர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நிஜாமுதீன், பொதுப்பணித்துறை (நீர் ஆதரவு) செயற்பொறியாளர் பொறி சுப்பிரமணியன், வட்டாட்சியர்கள், செயல் அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: