முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டு வளர்ச்சித் துறையின் மூலம் பட்டு உற்பத்தி செய்யும் 30 விவசாயிகளுக்கு ரூ.11 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      திருவண்ணாமலை
Image Unavailable

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் இஸ்லாமியா ஆண்கள் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறை மற்றும் மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் இணைந்து மல்பெரியில் வறட்சி மேலாண்மை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் அவர்கள் பேசியதாவது:-பட்டு வளர்ச்சி விவசாயிகளுக்கு மேலும் சிறப்பாக பட்டு உற்பத்தியை பெருக்கிட நடைபெறும் இக்கருத்தரங்கு சரியான காலகட்டத்தில் நடத்தப்படுகிறது. ஏனென்றால் இந்தாண்டு வறட்சியின் காரணமாக விவசாயிகள் விவசாயத்தை செய்ய முடியாமல் இருக்க வேண்டிய நிலையை உருவாக்காமல் கிடைக்கின்ற தண்ணீரை கொண்டு இந்த வறட்சி காலத்திலும் விவசாயத்தையும் பட்டுப்புழு செடிகளையும் வளர்த்திட பட்டுவளர்ச்சித் துறை விஞ் ஞானிகள் வழங்கும் தகுந்த ஆலோசனைகளையும் புதிய யுத்திகளையும் பயன்படுததிக்கொள்ள இக்கருத்தரங்கம் உதவியாக இருக்கும.; இதனை கொண்டு பட்டு வளர்ச்சி விவசாயிகள் தங்கள் பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ளலாம். எதிர்வரும் நாட்களில் வெப்பநிலையானது அதிகரிக்கும் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே விவசாயிகள் தங்கள் பயிர்களை கிடைக்கின்ற தண்ணீரை கொண்டு எவ்வாறு காப்பாற்றுவது குறித்தும் ஆலோசனைகளை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு இந்த வறட்சி காலத்தில் அரசுத் துறை சார்பாக இடுபொருட்கள், உபகரணங்கள் போன்ற உதவிகள் மான்யத்துடன் வழங்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.வேலூர் மாவட்டத்தில் ஆலங்காயம், நாட்றாம்பள்ளி, திருப்பத்தூர், வாணியம்பாடி, குடியாத்தம் மற்றும் வாலாஜா பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் மல்பெரி பயிரிட்டு பட்டுப்புழு வளர்ப்பின் மூலம் மாத வருமானம் பெற்று வருகின்றனர். இந்த விவசாயிகளின் மல்பெரி தோட்டம் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பினை பார்வையிட்டு ஏனைய விவசாயிகளும் மல்பெரி பயிரிட்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.கடந்த 2015-16 ஆம் ஆண்டு மாநிலத் திட்டத்தின்கீழ புதிய மல்பெரி நடவு செய்தல், தனி புழுவளர்ப்பு மனை கட்டுதல், சொட்டு நீர் பாசனம் அமைத்தல் மற்றும் புழுவளர்ப்புத் தளவாடங்களுக்காக ரூ.104.60 இலட்சங்கள் மானியத் தொகையாக 284 பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.நடப்பாண்டு போதிய பருவ மழையில்லாத நிலையில் மல்பெரியில் வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம், சேலம் மற்றும் தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறை, வாணியம்பாடி இணைந்து நடத்தும் "மல்பெரியில் வறட்சி மேலாண்மை" பற்றிய விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டுள்ள விவசாயிகள் அனைவரையும் வரவேற்று விஞ்ஞானிகள் கூறும் தொழில் நுட்ப அறிவுரைகளை கடைபிடித்து வறட்சியிலும் வளமான வருமானம் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். சொட்டுநீர் பாசனம் மற்றும் அதோடு இணைந்த யுககழசனயடிடந ஆiஉசழ ஐசசபையவழைn தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த நீரில் அதிக அளவில் மல்பெரி சாதுபடி செய்து வறட்சியிலும், இருக்கும் நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக அளவில் பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்து, கூடுதல் வருமானம் பெற்று பயனடையுமாறு கலெக்டர் சி.அ.ராமன், கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் 30 பட்டு விவசாயிகளுக்கு மாநில திட்டத்தின் கீழ் ரூ.11 இலட்சத்து 75 ஆயிரத்து 650ஃ-ற்கான காசோலைகளை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் சேலம் மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் முனைவர்.எஸ்.ராஜகுமார், முனைவர்.ரவிக்குமார், முனைவர்.பாலசரஸ்வதி, உதவி இயக்குநர் (பட்டு வளர்ச்சித் துறை) சுப்பிரமணி, இஸ்லாமிய கல்லூரி முதல்வர் பிரேம் நசீர், பட்டு வளர்ச்சித் துறை ஆய்வாளர் கணபதிராஜ் மற்றும் பட்டு வளர்ச்சித் துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago