முக்கிய செய்திகள்

பற்களை பாதுகாத்திடும் ஆரோக்கிய உணவுகள்

வெள்ளிக்கிழமை, 24 பெப்ரவரி 2017      மருத்துவ பூமி
madigal-2

Source: provided

நாம் நம்முடைய பற்களின் ஆரோக்கியத்தை பேணிக்காக்க என்னெவெல்லாம் செய்ய வேண்டும். பற்களை நன்றாக துலக்க வேண்டும். பல் துலக்கிய பின் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். இத்தகைய நடைமுறைகளை நாம் தவறாது பின்பற்றினால், பல் சம்பந்தப்பட்ட பல வியாதிகளை தடுக்கலாம். குறிப்பாக பற்சிதைவு, பல்சொத்தை மற்றும் பல்வேறு பல் வியாதிகளை தடுக்க இயலும். கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த, அமிலங்களை நடுநிலைப்படுத்தும், மற்றும் எச்சிலை தூண்டும் இந்த அற்புத உணவுகள் உங்களின் பற்களின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கின்றது.

அத்தகைய அற்புதமான 8 உணவுகளை நாங்கள் இங்கே பட்டியலிட்டுள்ளோம். அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

1. தண்ணீர்: உங்களின் பற்களை பாதுகாக்கும் சிறந்த உணவு இது. தண்ணீர் உங்களின் ஆரோக்கியமான பற்களுக்கு பல்வேறு வகைகளில் உதவுகின்றது. ஒவ்வொரு முறை, நீங்கள் உணவு உட்கொண்ட பிறகு தண்ணீர் குடிக்க மறவாதீர்கள். சாப்பிட்ட பிறகு நீங்கள் குடிக்கும் குடிநீர் உங்கள் வாயில் உள்ள உணவு துகள்களை சுத்திகரிக்கிறது. தண்ணீரை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் ஈறுகளில் தண்ணீரின் அளவு பாதுகாக்கப்படுகின்றது. மற்றும் தண்ணீர் உங்களின் பல் அரிப்பை தடுக்கிறது.

2. பால்: பாலில் அதிக அளவிலான கால்சியம், பாஸ்பேட், மற்றும் விட்டமின் டி உள்ளது. இது உங்களின் உடல் , கால்சியத்தை அதிக அளவில் உறுஞ்சுவதை உறுதி செய்கின்றது. அதன் காரணமாக உங்களின் எழும்புகள் மற்றும் பற்கள் வழுவடைகின்றது. தினசரி பால் அல்லது சோயா பால் அருந்துவது உங்களுடைய பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

3. பாலாடைக் கட்டி : உங்களுடைய பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மற்றொரு சிறந்த உணவு இது. பாலின் உப பொருளான இதில், பால் போன்றே கால்சியம், மற்றும் பாஸ்பேட், உள்ளது. மேலும் இது வாயில் உள்ள அமிலங்களை சமப்படுத்துகின்றது. பாலாடைக்கட்டியை நாம் பல்வேறு உணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம். மேழும் இது பற் குழியை தடுக்கின்றது.

4. ஆரஞ்சு: இந்த சிட்ரஸ் பழம் பற்களின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றது. இந்த பழத்தினுடைய சாறு வாயில் உள்ள தீங்கு புரியும் பாக்டீரியாக்களை அழிக்கின்றது. இதில் கவனிக்கத்த்தக்க ஒரு அம்சம் என்னெவெனில், ஆரஞ்சுப் பழம் அமிலம் நிறைந்த்தது. எனவே இதை உட்கொண்ட பிறகு உங்களின் வாயை கழுவுவது மிகவும் முக்கியம்.

5. ஆப்பிள்: இது மருத்துவர்களின் நண்பன் என அழைக்கப்படுகின்றது. இது வாயில் உள்ள எச்சிலின் அளவை அதிகரிக்கிறது மற்றும் பற்களில் குழி வராமல் தடுக்கிறது. ஆப்பிளில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்களின் ஒட்டுமொத்த சுகாதாரத்தை மேம்படுத்த உதவுகின்றது.

6. நட்ஸ்: நட்ஸ்களில் பற்களுக்குத் தேவையான பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. வேர்கடலை, பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி கொட்டைகள், போன்றவற்றில் நம்முடைய பற்களுக்குத் தேவையான நார்ப் பொருட்கள், தயாமின், வைட்டமின்கள், முதலியன அதிக அளவில் இருக்கின்றன. எனினும் நட்ஸ்களை உண்ணும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிக அழுத்தம் பற்களுக்கு கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் அது பற்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.

7. தேநீர்: பச்சை மற்றும் கருப்பு தேநீர் ஆகிய இரண்டிலும் பாலிபினால்கள் அதிக அளவில் உள்ளது. இது வாயில் உள்ள பாக்டீரியாக்களை தடுத்து தகடு வராமல் தடுக்கின்றது. இதன் காரணமாக பற்களை சிதைக்கும் அமிலம் உருவாவது தடுக்கப்படுகின்றது. பச்சை மற்றும் கருப்பு தேநீர் ஆகிய இரண்டிலும் பல் தகடு கட்டமைப்பை எதிர்த்துப் போராடும் திறன் உள்ளது.

8. டார்க் சாக்லேட்: டார்க் சாக்லேட்டில் உள்ள டானின் ஈறுகளின் வீக்கத்தை குணப்படுத்துகின்றது. அதன் மூலம் பல் அரிப்பு மற்றும் சிதைவு தடுக்கப்படுகின்றது. சாக்லேட்டில் உள்ள கொக்கோ வாயில் அமிலங்கள் உருவாவதை தடுக்கின்றது. மேழும் டார்க் சாக்லேட் ஈறுகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: