பெண் குழந்தை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம்

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2017      கடலூர்
kurinjippadi

குறிஞ்சிப்பாடி,

தேசியப் பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட கம்மாபுரம் வட்டம் சார்பில் விவேகானந்தா தொழில்நுட்ப கல்லூரி மாணவ மாணவியர்கள் பெண் குழந்தை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்  என்ற கோசத்துடன் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்நிகழ்ச்சியை நெய்வேலி மந்தாரகுப்பம் காவல்துறை உதவி ஆய்வாளர் பரமசிவம் அவர்கள் பேரணியை தொடங்கி வைத்தார். மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய வீதிகள் வழியாக சென்று கல்லூரிக்கு வந்தடைந்தனர் .இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைமை ஆசிரியர் வரவேற்று பேசினார்.சிறப்பு விருந்தினராக வடலூர் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்க தலைவி கவிஞர் வேம்பு அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு கூறி கொண்டது  பெண் பிள்ளைகளிடம் சகோரத்துவுடன் பழகவேண்டும்,ராக்கிங் செய்யக்கூடாது, தற்கொலையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.இதை முறியடித்து மாணவர்கள் தற்கொலை எண்ணத்திற்கு போகாமலும்,தீய பழக்க வழக்கங்கள்,இல்லாமலும், தன்னம்பிக்கையோடு இருந்து போராடி வெற்றி பெற்று வாழ்கையில் முன்னேற்ற பாதைக்கு செல்லவேண்டும் என்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேசினார் .இதில் செல்வி,கிரிஜா, சகாயபுலோராமேரி,கம்மாபுர சமூக நல அலுவலர், மணிமேகலை, திலகம் விஜயலட்சுமி, கீதாலட்சுமி,ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சமூக ஆர்வலர் கிருஷ்ணசாமி நன்றி உரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: