நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2017      தூத்துக்குடி
naangai mozhi

திருச்செந்தூர்

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை  கட்டுப்பாட்டில் உள்ள தென் காளகஸ்தி என அழைக்கப்படும் ராகு-கேது பரிகார ஸ்தலமான நங்கைமொழி அருள்மிகு ஞானபிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவில் மாலை 5 மணிக்கு செம்மறிக்குளம் கிராமம் ஸ்ரீவிநாயகர் திடல் மெஞ்ஞானபுரம் பஜாரில் இருந்து யானை முன்வர கரகாட்டம், மேளதாளத்துடன் 7ம் ஆண்டு 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு நங்கைமொழி முன்னால் பஞ்சாயத்து தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார்.  அய்யா வைகுண்டரின் அருளிசை புலவர் குரு சிவசந்திரர் பால் குட ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். செம்மறிக்குளம் பஞ்சாயத்து முன்னால் துணைத்தலைவர் ஜெயக்கனி முத்துமணி முன்னிலை வகித்தார். இரவு 7 மணிக்கு சுவாமி மற்றும் நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிசேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. இரவு 10மணிக்கு லண்டன் மிஹேல் ரெஸ்னிக் என்ற வாசுதேவ தத்த தாஸன் பக்தி சொற்பொழிவு, மற்றும் அய்யாவின் அருளிசை புலவர் குரு சிவச்சந்திரரின் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது.  விழாவில் திருப்பணிக்குழு தலைவர் வழக்கறிஞர் கண்ணன், திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கட் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் எம்.திருப்பதி, தொழில் அதிபர் விஜயராஜ், எஸ்.வி.பி சேர்மன் துரை, செல்வராஜலிங்கம், சிவசக்தி சரவணபாண்டியன். சீனியர் வழக்கறிஞர் இளங்கோ, மாவட்ட மருந்தாளுநர் பொன்பாண்டி,  இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் ரவிகிரு~;ணன், மாவட்ட அமைப்பாளர் தனலிங்கம், உடன்குடி ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சாத்தை ஒன்றிய அவைத்தலைவர் முத்துகிரு~;ணன், நங்கைமொழி ஊராட்சி திமுக செயலாளர் சித்திரைபாண்டி, உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பிரதோஷ அறக்கட்டளை தலைவர் உதயகுமார், செயலாளர் தசீந்திரன், பொருளாளர் சிவமுருகன் மற்றும் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: