முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா விட்டுச்சென்ற அனைத்து திட்டங்களும் மக்கள் பயனடைய செய்வோம்:அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2017      திருவண்ணாமலை
Image Unavailable

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா விட்டுச்சென்ற அனைத்து திட்டங்களும் மக்கள் பயனடைய செய்வோம் என்று திருவண்ணாமலை அடுத்த ஆடையூர் கிராமத்தில் நடந்த அதிமுக பொதுச்கூட்டத்தில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.திருவண்ணாமலை ஒன்றியத்துக்குட்பட்ட ஆடையூர் எம்ஜிஆர் திடலில் ஒன்றிய அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா 69வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ.கே.குமாரசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய மாணவரணி இணை செயலாளர் வி.முனுசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கே.அமுதாகுமாரசாமி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் எஸ்.ராஜேஸ்வரி சண்முகம், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல் என்.கோவிந்தன், ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தலைமை கழக பேச்சாளர் நெல்லை காந்திமதி நாதன், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அதனைத் தொடர்ந்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசுகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற அனைத்து திட்டங்களும் மக்கள் பயனடைய செய்வோம். எடப்பாடி முதல்வராக பொறுப்பேற்றவுடன் 5 முத்தான திட்டங்களுக்கு கையப்பமிட்டு செயல்படுத்துவதன்மூலம் மக்கள் பேராதரவு அரசாக அதிமுக செயல்பட்டு வருகிறது. என்றார். அதனைத் தொடர்ந்து 1000 பேருக்கு இலவச வேட்டி சேலைகளை அமைச்சர் வழங்கினார் இந்த நிகழச்சியில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இ.என்.நாராயணன், முன்னாள் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.பாலசுப்பிரமணியன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சாந்தி ஏழுமலை , பி.முத்து, ஆர்.முத்துலட்சுமி ரவி, ஜி.வீரமணி, எம்.கலியபெருமாள், எஸ்.மணிசக்கரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்.ராமமூர்த்தி, வி.சீத்தாராமன், சுமதி தருமராஜ், ஊராட்சி கழக செயலாளர்கள் வி.கேசவன், எஸ்.நடராஜன், ஜி.ஆறுமுகம், லெனின், ஆடையூர் கிளைக்கழக நிர்வாகிகள் ஆர்.குமார், ஆர்.ரவி, ஆர்.முருகன், ஏ..மேஷ், பி.ராஜா, மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் கே.சரவணன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றியகழக செயலாளர் ஏ.கே.குமாரசாமி செய்திருந்தார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்