இலுப்பகுணத்தில் மனைவியை கத்தியால் வெட்டி கொலை:கணவன் கைது

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2017      வேலூர்

ஆரணி அடுத்த இலுப்பகுணம் கிராமத்தில் மனைவி மீது சந்தேகம் அடைந்ததால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்த கணவனை போலீஸார் கைது செய்தனர். ஆரணி அடுத்த இலுப்பகுணம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி மகன் ஜஸ்டின்கென்னடி(32), ராணிப்பேட்டை அருகே உள்ள காரைப்பகுதியைச் சேர்ந்த குமார் மகள் சுமதி(30)க்கும் 5 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 மாத கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில் சுமதி நடத்தையில் சந்தேகமடைந்த ஜஸ்டின்கென்னடி இது குறித்து அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜான்கென்னடி கத்தியை எடுத்துக்கொண்டு சுமதியை வெட்ட சென்றார். சுமதி எழுந்து வீட்டிலிருந்து வெளியே ஓடினார். பின்னால் ஓடிச்சென்று சுமதியை வெட்ட முயன்றார். அப்போது வெளியே படுத்திருந்த ஜான்கென்னடியின் தந்தை அந்தோணி, அண்ணன் ஜான்ஸ் ஆகியோர் ஜான்கென்னடியை பிடித்து இழுத்தனர். அவர்களை கீழே தள்ளிவிட்டு சுமதியை வெட்டினார். மேலும் அந்தோணி, ஜான்ஸ், கைக்குழந்தையையும் கத்தியால் தாக்கினார். இதனால் 3 பேரும் காயமடைந்தனர். காயமடைந்த ஜான்ஸ் காயத்துடனேயே ஜான்கென்னடியை பிடித்துக்கொண்டு களம்பூர் போலீஸில் ஒப்படைத்தார். இதன்பேரில் போலீஸார் ஜஸ்டின்கென்னடியை கைது செய்து சம்பவ இடத்திற்கு சென்று சுமதியின் சடலத்தை ஆரணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமாகி 5 ஆண்டுகளே ஆனதால் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.

 

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: