முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா:கும்பகோணம் அரசு கல்லூரி முன்னாள் முதல்வர் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

என்னால் வெற்றி பெற முடியும் என நினைத்தால் அனைத்திலும் வெற்றி பெறலாம் என்று வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் ஏ.ஜான்மரினா  பேசினார். வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் ஸப்த விழாக்களின் 2-ம் நாள் நிகழ்வாக இன்று காலை கல்லூரி வளாகத்தில் பட்டமளிப்பு விழா  கல்லூரி செயலரும் திருவள்ளுவர் பல்கலைகழக ஆட்சிமன்ற  குழு உறுப்பினருமான எம். இரமணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.விழாவுக்கு கல்லூரி நிறுவனர்  பா. முனிரத்தினம் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர்  எம்.எச்.எஸ்.முகமது யாகூப் வரவேற்புரையாற்றினார். அரிமா ஆர்.சரவணன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். அரிமா முன்னாள் மாவட்ட ஆளுநர் வி.எஸ்.தளபதி கலந்துகொண்டு மாணவிகளை வாழ்த்தி பேசினார். விழாவில் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் ஏ.ஜான்மரினா  கலந்து கொண்டு மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார்.அவர்பேசும் போது இக்கல்லூரி மிகச்சிறப்பான  கட்டிடங்களுடன் இயற்கை எழில் சூழ்ந்த இடமாக அமையப்பெற்று ரம்மியமாக உள்ளது.ஆதலால் மாணவிகளாகிய நீங்கள்  இக்கல்லூரியை தேர்ந்தெடுத்ததற்கு பாராட்டுக்கள்.அதே வேளை உங்களின் பேற்றோருக்கும் எனது  பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.1995 ம் வருடம் இக்கல்லூரி தொடங்கிய போது 10 பேராசிரியர்கள்  ஒரு அலுவலருடன் இருந்த இக்கல்லூரி தற்போது 100 பேராசிரியர்கள் 50 அலுவலக பணியாளர்கள் என விரிந்து செயல்படுகிறது, அதற்காக கல்லூரி நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள்.இக்கல்லூரியின் சார்பாக இதுவரை 800 ஆராய்ச்சி கட்டுரைகளும் 250 க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளும் நடைபெற்றதை எண்ணி நான் வியக்கிறேன். ஏனெனில் பல்கலைகழகங்களில் கூட இத்துனை ஆராய்ச்சி கட்டுரைகளும் கருத்தரங்குகளும் நடைபெற்றதில்லை. மேலும் இக்கல்லூரி சார்பில் இதுவரை 700 க்கும் மேற்பட்ட மாணவிகள் வளாகத் தேர்வில் வேலை வாய்ப்பு பெற்றதையும் 250 மாணவிகள் போட்டித்தேர்வில் வேலை வாய்ப்பு பெற்றதையும் பாராட்டுகிறேன்.மாணவிகளாகிய உங்களுக்கு ஆசிரியர்கள்தான் தெய்வம் எனவே நீங்கள் உயர்ந்த ஸ்தானத்தை அடையவேண்டுமெனில் ஆசிரியர்களை மதித்து நடந்து கொள்ளுங்கள்.என்னால் முடியும் என்னால் வெற்றி அடைய முடியும் எனமனதில் உறுதி வைத்து உழைத்தால் வெற்றி நிச்சயம்  என சிறப்புரையாற்றினார்.விழாவில் 687 இளங்கலை மாணவிகளுக்கும் 101 முதுகலை மாணவிகளுக்கும் என மொத்தம் 788 பட்டங்களை முனைவர் ஏ.ஜான்மரினாவழங்கினார்.இந்நிகழ்ச்சியின் முடிவில் உதவி பேராசிரியை  நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்