முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண்மைத் துறையில் பயிறு வகை சிறப்பு திட்டம் மற்றும் நுண்ணீர் பாசன திட்டத்தினை வறட்சி காலத்தில் பயன் படுத்தி மகசூலை பெருக்க வேண்டும்: கலெக்டர் சி.கதிரவன் விவசாயிகளுக்கு வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி மாவட்டம்; மத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த  50 - சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு  வேளாண்மைத் துறை சார்பில்  பயிறு வகை சிறப்பு திட்டத்தின் கீழ் ஹெக்டர் ஒன்றிற்க்கு மானிய விலையில் ரூ. 5000 மதிப்பிலான  வேளாண் இடுப்பொருட்களை கலெக்டர் சி.கதிரவன்  வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் சங்கரன் முன்னிலை வகித்தார். பின்பு விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கி கலெக்டர்  உரையாற்றும் போது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  விவசாயிகளுக்கு பயறுவகை சிறப்பு திட்டத்தின்கீழ் உளுந்து செயல்விளக்கம் ஏக்கர் 1-க்கு ரூ.2000ஃ- வீதம் 500 ஏக்கருக்கு ரூ.10 இலட்சம் மானியத்தில் இடுபொருட்கள் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இடுபொருட்களாக  ஒரு ஏக்கருக்கு பயிறு விதை (உளுந்து 8கிலோ), டிரைக்கோடெர்மா விரிடி (1கிலோ),  பூசா ஹைட்ரோஜெல் (100கிராம);, நுண்ணூட்ட உரம் (2கிலோ), திரவ உயிர் உரம் (400மி.லி), டி.ஏ.பி (10கிலோ)  என இன்று  மத்தூர் வட்டாரத்தை சேர்ந்த 50 விவசாயிகளுக்கு  இடுபொருட்கள் மற்றும் உரங்கள் வழங்கப்பட்டுள்ளது.           மேலும், இந்த சிறப்பு திட்டத்தின்கீழ் கோடை காலத்தில் நீர் பற்றாக்குறையினை ஈடுசெய்யும் வகையில் நமது மாவட்டத்திற்கு வேளாண்மைத்துறையின் மூலமாக தெளிப்பு நீர் பாசனம் ஒன்றிற்கு ரூ.19600ஃ- மழை தூவுவான் கருவி  எக்டர் ஒன்றிற்கு ரூ.31600ஃ-ம் மானியமாகவும் ஒரு விவசாயிக்கு ரூ. 1 லட்சம் மானியத்தில் டிராக்டர்     விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2016-2017 நிதியாண்டில்  சிறுஃகுறு விவசாயிகளுக்கு 100 - சதவிகதம் மானியத்திலும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75 - சதவிகிதம்  மானியத்தில் வழங்க இதன் பொருட்டு தெளிப்பு நீர் பாசனம் 275 எக்டரும், மழை தூவுவான் 50 எக்டரும் ரூ.63.70 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. வேளாண்மைத்துறையின் மூலமாக நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் பயறு வகைகள், கரும்பு, பருத்தி, மக்காச்சோளம், தென்னை மற்றும் எண்ணெய்பணை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு 600 எக்டரில் ரூ.447 இலட்சத்தில் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதில் சிறுஃகுறு விவசாயிகளுக்கு 100 சதவிகித  மானியத்திலும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75, சதவிகித   மானியத்திலும் வழங்கப்படுகிறது. தோட்டக்கலைத்துறையின் மூலமாக காய்கறி மற்றும் பழப்பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு 2037 எக்டருக்கு ரூ.1401.98 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதனை அனைத்து விவசாயிகளும் பெற்று மகசூலை அதிகப்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள்  சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைத்து குறைந்த தண்ணீரை கொண்டு வறட்சியிலிருந்து பயிர்களை காப்பாற்றி  நல்ல  மகசூல் பெற்று அதிக வருமானத்தை விவசாயிகள் எடுக்க வேண்டும் என கலெக்டர் சி.கதிரவன்  உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) பன்னீர் செல்வம், வேளாண்மை அலுவலர் அதிபதி, பட்டுவளர்ச்சித் துறை உதவி இயக்குநர் வீரராகவன், பட்டு வளர்ச்சித் துறை உதவி அலுவலர் செல்வி, சுபாஷினி, துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், உதவி விதை அலுவலர் பாலகிருஷ்ணன்,  உதவி வேளாண்மை அலுவலர்கள் அரிகுமார், மாதையன், பிரபு,  பெரியசாமி,  மற்றும் வட்டார தொழிற்நுட்ப மேலாளர் ராஜ்குமார் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்