மத்தூர் ஒன்றியத்தில் பட்டுவளர்ச்சித் துறை மற்றும் குடிநீர் வினியோக திட்ட பணிகள் :கலெக்டர் சி.கதிவரன் நேரில் ஆய்வு

சனிக்கிழமை, 4 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
2

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டனூர் ஊராட்சியில் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் சுண்டகாப்பட்டி ஊராட்சியில் கச்சா பட்டுநூல் தொழிற்நுட்ப பல்முனை பட்டு நூற்பக பணிகளை கலெக்டர் சி.கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து கலெக்டர் தெரிவிக்கும் போது: அரசு மத்திய பட்டு வாரியம் மற்றும் அரசு பட்டு வளர்ச்சி துறை இணைந்து புதிய தொழில் முனைவோர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் புதுவாழ்வு திட்ட மகிளிர் சுய உதவிக்குழுக்குளுக்கு 1 வாரம் பயிற்சி வழங்கப்படுகிறது. பின்பு தனியார் பட்டு நூற்பு மையத்தில் மகளிர்க்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. சுண்டகாபட்டியில் பட்டு நூற்பகம் அமைத்துள்ள வெங்கடாஜலபதி என்பவருக்கு மத்திய அரசு பங்களிப்பாக 75 சதவிகிதமும், தமிழக அரசு 15 சதவிகிதமும், பயனாளியின் பங்களிப்பாக 10 சதவிதமும் என பட்டு நூற்பு மையம் அமைக்க மொத்தம் ரூ. 14.50 லட்சம் மதிப்பில் இந்த பட்டு நூற்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பட்டு நூற்புக்கு தேவையான வெண்பட்டு கூடுகள் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி அரசு வெண்பட்டு கூடு அங்காடியிலிருந்து வாரத்திற்கு 400 முதல் 500 கிலோ வரை ரூ. 450 வீதம் கொள்முதல் செய்யப்படுகிறது. பட்டு நூற்பு மையத்தில் வாரம் 40 கிலோ வரை பட்டு நூல் உற்பத்தி செய்து காஞ்சிபுரம் அரசு அண்ணா பட்டு பரிமாற்றம் மையத்தில் நேரடியாக 1 - கிலோ ரூ.3500 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே கிராம புறங்களில் விவசாயிகள் பட்டு நூற்பகம் அமைத்து நல்ல லாபம் பெறலாம். அதோடு மகளிர் சுய உதவிக்குழுவினர், புதுவாழ்வு திட்ட மகளிர் குழுவினர், கிராமபுற இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கிறது. மேலும் புதிய தொழிற்முனைவோர்கள் அரசின் இது போன்ற திட்டங்களை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் சி.கதிரவன் செய்தியாளர் அவர்களிடம் தெரிவித்தார். முன்னதாக மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டனூர் கிராமத்தில் குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சோனாரஅள்ளி கிராமத்தில் திறந்த வெளி கிணற்றில் தற்போது குடிநீர் உள்ள நிலையில் மின் மோட்டார் சரிசெய்து உடனடியாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என ஒன்றிய பொறியாளர்களுக்கு உத்திரவிட்டார். தொடர்ந்து கவுண்டனுரில் திறந்த வெளிகிணறு பார்வையிட்டு அவற்றை ஆழப்படுத்தி பைப் லைன் அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய கலெக்டர் அவர்கள் உத்தரவிட்டார். இவ்வாய்வின் போது பட்டுவளர்ச்சித் துறை உதவி இயக்குநர் வீரராகவன், பட்டு வளர்ச்சித் துறை உதவி அலுவலர் செல்வி, சுபாஷினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆப்தாபேகம், ஒன்றிய பொறியாளர்கள் ஜமுனாபேகம், பழனிசாமி ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்பு எண்: பட்டு விரிவாக்க அலுவலர் எண் : 8508075550

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: