மேச்சேரியில் இடமாற்றம் செய்யப்பட்ட இந்தியன் வங்கியின் புதிய கிளை: கலெக்டர் வா.சம்பத், திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 4 மார்ச் 2017      சேலம்
1

 

சேலம் மாவட்டம், மேச்சேரியில் இந்தியன் வங்கியின் இடமாற்றம் செய்யப்பட்ட புதிய கட்டிடம் மற்றும் மின்னணு சேவை மையத்தினை நேற்று (04.03.2017) கலெக்டர் வா.சம்பத், திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு இந்தியன் வங்கியின் சேலம் மண்டல துணை பொது மேலாளர் சி.ஆர்.கோபிகிருஷ்ணன் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் அவர்கள் பேசியதாவது. தமிழக அரசால் விவசாயம், கல்வி ஆகியவற்றிக்கு முன்னுரிமை அடிப்படையில் தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கப்பட்டுவருகிறது குறிப்பாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் தொடங்குவதற்கு என பல்வேறு சேவைகளை சிறப்பாக செய்து வருகிறது. விவசாயிகளுக்கு பயிர் கடன், குறுகிய கால கடன் இந்தியன் வங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட மாதாந்திர உதவித்தொகைகள் அதிக அளவில் இந்தியன் வங்கியின் முலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த புதிய கிளை அலுவலகம் போக்குவரத்திற்கு இடையூறு இன்றி வாடிக்கையாளர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் சேவையில் சிறந்து விளங்குகிறது. இந்தியன் வங்கியினை நாடி வரும் பொதுமக்கள், விவசாயிகளுக்கு தொடர்ந்து சிறப்பாக சேவையாற்ற வேண்டும். அதிக அளவில் கல்வி கடன் வழங்க முன்வர வேண்டும். அதே போல் வாடிக்கையாளர் வங்கியின் மூலம் பெற்ற கடனை உரிய தவணையில் திருப்பி செலுத்துவதன் மூலம் மேன்மேலும் அதிக அளவில் தேவையான கடனை வழங்கி அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வங்கி உதவ முடியும். வங்கி சேவையினை பொதுமக்கள் அனைவரும் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் வா.சம்பத், பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஏ.உதயகுமார், வங்கி கிளை மேலாளர் எஸ்.புவனேஸ்வரி, நிதி சார் கல்வி மைய ஆலோசகர் ஏ.கே.பழனிவேல் மற்றும் வங்கி ஊழியர்கள், வணிகத் தொடர்பாளர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: