முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய தேர்தல் ஆணையம் அடையாளச் சான்றை காட்டி இ-சேவை மையங்களில் இலவச வாக்காளர் அட்டை பெறலாம் :கலெக்டர் சி.கதிரவன் தகவல்

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      கிருஷ்ணகிரி

 

2017 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி வரைவுப்பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்ய விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பெறப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 47 ஆயிரத்து 196 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 44 ஆயிரத்து 770 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அதனை தொடர்ந்து, கடந்த 2017 ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டை பதிவு ஆகியவற்றின் காரணமாக 14 ஆயிரத்து 080 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்போது மாவட்டங்களில் இருந்து தரவுகள் தொகுக்கப்பட்டு, புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடுவதற்காக ஒப்பந்ததாரர்களுக்கு அனுப்பப்பட்டது. கடந்த ஆண்டு அச்சிடப்பட்ட அட்டைகள் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது. புதிய வாக்காளர்களுக்கு தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பத்தில். தங்களின் கைப்பேசி எண்ணை அளித்துள்ள புதிய வாக்காளர்களுக்கு ஒரு தனிப்பட்ட அடையாள எண், குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். இந்த அடையாள எண்ணை தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்தில் காண்பித்து வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.இதற்காக புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. தங்களுடைய கைப்பேசி எண்ணை அளிக்காத புதிய வாக்காளர்கள், தேர்தல் துறையின் கட்டணமில்லா உதவி எண் 1950-ஐ தொடர்புகொண்டு கைப்பேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கும் அடையாள எண் அனுப்பப்படும். இவர்களும் தங்களுடைய ஏதேனும் ஒரு புகைப்பட அடையாளச்சான்றை காண்பித்து இ-சேவை மையங்களில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் .

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago