செஞ்சியில் வழக்குரைஞர்கள் இன்றும் நாளையும் நீதிமன்ற புறக்கணிப்பு

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      விழுப்புரம்

செஞ்சியில் வழக்குரைஞர் இன்று வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களிலும் நீதிமன்றம் புறக்கப்பு செய்ய உள்ளனர்.செஞ்சி ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் வியாழன் அன்று வழக்குரைஞர் சங்க தலைவர் என்.கண்ணதாசன் மற்றும் அட்வகேட் அசோசியேஷன் சங்க தலைவர் பி.ஆத்மலிங்கம் ஆகியோர் தலைமையில் இரண்டு சங்கங்களின் அவசர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:தமிழ்நாடு அரசு முத்திரை வில்லைச் சட்டத் திருத்தத்தில் புதிய கட்டண விதிமுறயை கொண்டு வந்து பல மடங்கு உயர்வான அளவில் கட்டணம் செலுத்துவது என்பது வழக்குரைஞர்களுகு பெரிய சுமையாகும். கவலையையும் அளிக்கக்கூடியது என தெரிவித்து புதிய கட்டண உயர்வை உடனடியாக மறு பரிசீலனை செய்ய கோருவதுடன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படியும் இச் சங்கங்கள் கேட்டுக்கொள்கிறது. நமது சங்கங்களின் உறுப்பினர்களின் மேற்கண்ட கருத்தை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு, ஈரோடு அலுவலகத்திற்கு தெரிவித்துக்கொள்கின்றன. மேற்கண்ட தீர்மானங்களை அனுசரித்து நமது மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் கேட்டுக்கொண்டதின்பேரில் நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் வரும் 10-3-2017 மற்றும் 11-3-2017 ஆகிய இருதினங்களும் செஞ்சியில் உள்ள அனைத்து நீதி மன்ற பணிகளிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது என இச் சங்கங்கள் தீர்மானம்நிறைவேற்றி உள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: