Idhayam Matrimony

BP180 திரை விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 2 டிசம்பர் 2025      சினிமா
BP180-Review 2025-12-02

Source: provided

வட சென்னை பகுதியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனை மருத்துவரான தன்யா ரவிச்சந்திரன், தன் வேலையில் நேர்மையாக ஒரு விசயத்தை செய்கிறார். இதனால், அப்பகுதியில் உள்ள பயங்கரமான ரவுடி டேனியல் பாலாஜி அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். இந்த விவகாரத்தில் தலையிடும் சென்னை காவல்துறை ஆணையரையும் கொலை செய்யும் டேனியல் பாலாஜி, தன்யா ரவிச்சந்திரனை பழிவாங்க துடிக்கிறார். யார் யாரை பழி வாங்கியது என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ். கதையின் நாயகியாக தைரியமான பெண்ணாக நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன், அளவான நடிப்பு மூலம் அசத்துகிறார். இறுதியாக அவருக்கு விடும் சவால், திரையரங்கையே அதிர வைக்கிறது. காசிமேடு ரவுடி அர்னால்டு கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தன் கண்களின் மூலம் கோபத்தை வெளிப்படுத்தி நடிப்பிலும் அரக்கனாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் இரவிலும் பகலிலும் தனது கேமரா மூலம் மாயாஜாலம் நிகழ்த்தி இருக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான், இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் மனநிலையை தனது இசை மூலமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். எழுதி இயக்கியிருக்கும் ஜெ.பி, சில காட்சிகளில் மிரள வைத்து, சில காட்சிகளிள் லாஜிகை மீறி இருக்கிறார். மொத்தத்தில், ‘பிபி 180’ ஒரு முறை பார்க்கலாம்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து