முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய இந்தியா உருவாகிறது: பிரதமர் மோடி பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : புதிய இந்தியா உருவாகிக்கொண்டியிருக்கிறது. அந்த புதிய இந்தியா வளர்ச்சியின் அடிப்படையில் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில் நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 3-ல் 2 பங்கு மெஜாரிட்டியுடன் பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்துள்ளது. மேலும் உத்தரகாண்ட் மாநிலத்திலும் பாரதிய ஜனதா அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 56-ல் பாரதிய ஜனதா வெற்றிபெற்றுள்ளது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் வெறும் 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் பாரதிய ஜனதா அதிக இடங்களில் வெற்றிபெறாவிட்டாலும் ஆட்சி அமைப்போம் என்று அந்தக்கட்சி தலைவர் அமீத்ஷா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய இந்தியா, வளர்ச்சி அடிப்படையில் உருவாகிக்கொண்டியிருக்கிறது என்று கூறியுள்ளார். உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாரதியஜனதா அமோக வெற்றிபெற்ற மறுநாள் பிரதமர் மோடி இதை தெரிவித்துள்ளார். புதிய இந்தியாவை உருவாக்க நான் எடுத்துவரும் மொபைல் ஆப் நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் உறுதுணையாக இருப்பதோடு பெரும் ஆதரவும் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த புதிய இந்தியாவானது நாட்டில் உள்ள 125 கோடி மக்களின் திறன் மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில் இருக்கும். வரும் 2022-ம் ஆண்டு நாட்டன் 75-வது சுதந்திர தினம் கொண்டாடும்போது மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் உருவாகி இருப்பார்கள். டாக்டர் அம்பேத்கார் பெருமைப்படக்கூடியவர் என்றும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியுள்ளார்.

மேலும் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நடந்த முடிந்த தேர்தலில் ஜனநாயகத்தில் மக்கள் நம்பிக்கை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. மக்கள் சலுகைகளை விரும்பவில்லை என்றும் வளர்ச்சியையே விரும்புகிறார்கள். மக்களின் விருப்பத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்.  உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதாவை அமோக வெற்றிபெறச் செய்ததற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் மோடி மேலும் கூறினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago