முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'கஜானா ' திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 12 மே 2025      சினிமா
Kajaana-Review 2023 05 12

Source: provided

அடர்ந்த காட்டு பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைத்த பொக்கிஷம் இருப்பதாகவும், அதனை டைனோசர் காலங்களில் வாழ்ந்த யாளி விலங்கு பாதுகாத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அந்த பொக்கிஷத்தை எடுக்க பலர் முயற்சித்து பலியாகி கொண்டிருந்தாலும், பேராசை பிடித்த மனிதர்கள் பலர் அந்த பொக்கிஷத்தை அடைவதற்கு தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். அவர்களில் ஒருவராக நாயகன் இனிகோ பிரபாகர் தனது குழுவினருடன் நாகமலைக்கு செல்கிறார். மறுபக்கம், அதே பொக்கிஷத்தை கைப்பற்றுவதற்கான முயற்சியில் பிரபல அகழ்வாராய்ச்சியாளரான வேதிகாவும் ஈடுபடுகிறார். இவரகளுடன் யோகி பாபு மற்றும் நான் கடவுள் ராஜேந்திரனும் அந்த காட்டுக்குள் பயணப்படுகிறார்கள்.

இதற்கிடையே, பொக்கிஷம் இருப்பதாக நம்பப்படும் அந்த இடத்தில், நாக இனத்திற்கு சொந்தமான பஞ்ச பூதங்களையும் கட்டுப்படுத்தும் நவரத்தின கற்கள் இருக்கும், உண்மை தெரிய வருவதோடு, அதனை கைப்பற்றுவதற்காக பல வருடங்களாக போராடி வரும் கருட இனத்தின் தலைவி சாந்தினி, இனிகோ பிரபாகர் அந்த இடத்தை நெருங்கும் போது, அவரிடம் இருந்து அதனை கைப்பற்ற திட்டமிடுகிறார். நவரத்தின கற்களை கைப்பற்ற முயற்சிக்கும் இவர்களின் நிலை என்ன ஆனது?, அதனை பாதுகாக்கும் யாளி உண்மையா?, நாகமலையை சுற்றியிருக்கும் மாய உலகத்தின் பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கு பிரமாண்டமான வி.எப்.எக்ஸ் காட்சிகள் மூலமும், சுவாரஸ்யமான ஃபேண்டஸி கற்பனை கதை மூலமும் பதில் அளிப்பது தான் ‘கஜானா’.

தமிழ் சினிமாவின் அட்வெஞ்சர் படங்கள் வருவது என்பதே மிக அரிதானது, அதில் அட்வெஞ்சர் உடன் ஃபேண்டஸி மற்றும் பிரமாண்டமான வி.எப்.எக்ஸ் காட்சிகளுடன் வெளியாகியிருக்கும் ‘கஜானா’ சிறுவர்களுக்கு மட்டும் இன்றி பெரியவர்களுக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கிறது.

சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருப்பதோடு, ஃபேண்டஸி, அட்வெஞ்சர், அனிமேஷன் ஆகியவற்றின் மூலம் இந்த ‘கஜானா’-வை பிரமாண்ட படைப்பாக கொடுத்திருக்கும் இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸ், சிறப்பு வணக்கம்.

மொத்தத்தில், இந்த ‘கஜானா’ அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து