அம்மனூரில்திருமண கோலத்தில் ஸ்ரீ அம்பிகேஷ்வரர் தெப்பல் விழா

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      வேலூர்
Dt 15 AKM POTO 01 jpg

அரக்கோணம் அருகே அம்மனூரில் ஸ்ரீகாமாஷியம்மாள் சமேத ஸ்ரீஅம்பிகேஷ்வரர் சிவாலயத்தில் ஸ்ரீகாமாஷியம்மாள் சமேத ஸ்ரீஅம்பிகேஷ்வரர் திருக்கல்யாண கோலத்தில் தெப்பல் உற்சவம் நடந்தேறியது. இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே அம்மனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில உள்ள மிகவும் பழமையான ஸ்ரீகாமாஷியம்மாள் சமேத ஸ்ரீஅம்பிகேஷ்வரர் எழுந்தருளி மக்களுக்கு நல்லாசி வழங்கி வருகிறார். மாசி மஹா மகம் பௌர்ணமி முன்னிட்டு இந்த ஆலயத்தில் ஞாயிற்று கிழமை காலை ஆலயத்தில் சிறப்பு அபஷேகங்களும் மாலையில் வெகு சிpறப்பாக திருகல்யாணமும் நடந்து முடிந்தது. பின்னர், திருமண கோலத்தில் தெப்பல் விழா நடைபெற்றது. இத்திருமண ஏற்பாடுகளில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஏ.தேவவெங்கடரத்தினமும், உதவியாக ஏடி.பாபு குருக்கள் மற்றும் இளைஞர்கள் முழுமையாக ஈடுபட்டனர். இந்த திருமணத்தில் முன்னாள் அரக்கோணம் ஒன்றிய குழு தலைவர் பி.மோகன், தொழிலதிபர் வ.மகாலிங்கம், மோசூர் நர்சரி பயிற்சி முதல்வர் முத்துகுமார், உள்ளிட்ட ஆன்மீக பக்தர்கள் திராளாக கந்து கொண்டு காமாஷியம்மாள் சமேத ஸ்ரீஅம்பிகேஷ்வரர் அருள் பெற்றனர்

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: