தொன்போஸ்கோ கல்லூரியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      தர்மபுரி
tmp

 

தருமபுரி மாவட்டம் சமூகப் பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள இளங்கலை மற்றும் முதுகலை சமூகப்பணி பயிலும் மாணவ, மாணவியருக்கான திறன் வளர்ப்பு பயிற்சி தொன்போஸ்கோ கல்லூரியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் முதல் நிகழ்வாக வரவேற்புரையை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டாக்டர்.ராஜமீனாட்சி அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட குழந்தைகளின் பாதுகாப்பு திட்டம் பற்றி விளக்கினார். குழந்தைகள் நலக்குழும உறுப்பினர் டாக்டர்.மனோகர் குழந்தைகளுக்கான சட்டங்கள் பற்றியும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்கள் மற்றும் பதிவு பற்றி உரையாற்றினார். பாதுகாப்பு அலுவலர் சித்தார்த்தன், சரவணா அவர்கள் குழந்தைகளின் உரிமைகள் குறித்து விளக்கி உரையாற்றினர். மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களிடையே தோன்றும் தற்கொலை எண்ணங்களைத் தவிர்க்கும் பொருட்டு தலைமை ஆசிரியர்களுக்கும், நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர்களுக்கும் ஏற்கனவே நடத்தப்பட்ட திறன் வளர்ப்பு பயிற்சி (01.02.2017)யின் தொடர் கண்காணிப்பில், சமூகப்பணி பயிலும் மாணவர்களின் பங்கு மற்றும் அவர்களுக்குரிய தொடர் பயிற்சிகள் பற்றி தொன்போஸ்கோ கல்லூரியின் சமூகப்பணி துறைத்தலைவர் அ.பிரபு தலைமையில்; ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தற்கொலை எண்ணத்தைத் தவிர்க்க மாணவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் பற்றியும் விவாதிக்கபட்டது. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணிகள் மற்றும் மாணவிர்களிடையே தற்கொலை எண்ணங்களைக் தவிர்க்க உதவும் மன அழுத்தம் குறைத்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் சம்மந்தப்பட்ட கையேடு வழங்கப்பட்டது. இல்லத்தந்தையும் முதல்வருமாகிய அருட்முனைவர் அ.மரியசூசை, அவர்கள் தலைமையேற்று இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தார். துணை முதல்வர் அருட் இராபர்ட் ரமேஷ் பாபு, பொருளாளர் அருட் பாரதி பெர்னாட்ஷா, அவர்கள் முன்னிலை வகித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: